பெற்றோர்களை வரவழைக்க வேண்டுமாயின் ஆண்டு வருமானம் 45 ஆயிரத்து 185 டொலர் தேவை!

அவுஸ்திரேலியாவுக்கு வெளிநாடுகளிலிருந்து தங்களது பெற்றோர்களை வரவழைப்பதில் இருந்த சிக்கல் நிலைக்கு தீர்வு காண அரசு தீர்மானித்துள்ளது.

நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தவல்ல நடைமுறை ஏப்ரல் முதலாம் திகதி அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில் அதை ரத்து செய்ய அரசு தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

இதுவரை காலமும் தங்களது பெற்றோரை அவுஸ்திரேலியாவுக்கு அழைக்க விரும்பும் கணவனும் மனைவியும் கூட்டாக, 45 ஆயிரத்து 185 டொலர்களை ஆண்டு வருமானமாக பெற வேண்டும்.

இந்த நடைமுறையை இந்த கூட்டுவருமான தொகையை ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 475 டொலர்களாக அரசு அதிகரித்திருந்தது.

மேலும் தனி நபர் ஒருவர் தனது பெற்றோரை அவுஸ்திரேலியாவுக்கு அழைப்பதானால், அவர் ஆண்டொன்றுக்கு 45 ஆயிரத்து 185 டொலர்கள் வருமானம் ஈட்டுபவராக இருக்கவேண்டும்

இந்த நடைமுறை திருத்தப்பட்டு, அவர் 86 ஆயிரத்து 606 டொலர்களை ஆண்டு வருமானமாக பெறுபவராக இருக்கவேண்டும் என்ற மாற்றம் கொண்டு வரப்பட்டது.

இந்தநிலையில் இச்சட்டமாற்றத்தை ரத்துச் செய்யும் வகையில் இவ்வாரம் நாடாளுமன்றில் disallowance motion கொண்டுவரப்படும் என்று கிரீன்ஸ் கட்சி செனட்டர் Nick McKim கூறியிருந்தார்.

இவ்வாறு இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு எதிர்ப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இப்புதிய மாற்றத்தைக் கைவிட அரசு தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.