அவுஸ்திரேலியாவிற்குள் உள் நுழையும் வெளிநாட்டு மருத்துவர்களை குறைக்க தீர்மானம்!

அவுஸ்திரேலியாவிற்கு வந்து பணிபுரியும் வெளிநாட்டு மருத்துவர்களுக்கான இடங்களைக் குறைப்பதற்கு அவுஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது.

நேற்று (080 2018 ஆம் ஆண்டுக்குரிய நிதிநிலை அறிக்கையை கருவூலக்காப்பாளர் Scott Morrison நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதன்போது இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டது.

அவுஸ்திரேலியாவில் இதுவரை ஆண்டொன்றுக்கு 2300 வெளிநாட்டு மருத்துவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்து பணிபுரிவதற்கான விசா வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இதனை 2,100 ஆக குறைப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

மேற்குறித்த முடிவின் காரணமாக அடுத்த 4 ஆண்டுகளில் மெடிகெயார் ஊடாக 416 மில்லியன் டொலர்களை சேமிக்க முடியுமென கூறப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் சேமிக்கப்படும் நிதி ஏனைய சுகாதார கொள்கைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக அமையுமென கூறப்பட்டுள்ளது.