அவுஸ்திரேலியமுரசு

தாய்லாந்து குகைக்குள் சிறுவர்களுடன் தங்கிய ஆஸி. வைத்தியருக்கு நேர்ந்த சோகம்!

தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர்களை மீட்கச் சென்ற நீச்சல் வீரர்களில் ஒருவரானத ஆஸ்திரேலிய வைத்தியரின் தந்தை நேற்று மரணமடைந்தார். தாய்லாந்தில் உள்ள தாம் லுங் குகைக்கு கடந்த மாதம் 23-ஆம் திகதி 12 கால்பந்து விளையாடும் சிறுவர்களும் அவர்களது பயிற்சியாளரும் சென்றனர். அப்போது பெய்த கனமழையால் கடும்வெள்ளம். இதனால் குகைக்குள், சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் சிக்கிக் கொண்டனர். ஒன்பது நாட்களுக்குப் பின்னர், கடந்த 2-ம் திகதி அவர்கள் குகைக்குள் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த செய்தி பரபரப்பானது. அவர்களை எப்படி மீட்பது ...

Read More »

அவுஸ்திரேலியாவிற்கு ஐநா மீண்டும் கண்டனம்!

அவுஸ்திரேலியா அகதிகளை நடாத்தும் முறை குறித்து ஐநா மீண்டும் கண்டனம் வெளியிட்டுள்ளது. ஐ.நா வின் working group on arbitrary detention- தடுப்புக்காவல்களுக்கெதிரான செயற்பாட்டுக் குழு இந்தக் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியவர்களில் பலர் 9 ஆண்டுகளைக் கடந்தும் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். இது நியாயமற்ற செயல் என இக்குழு கண்டித்துள்ளது. தஞ்சக்கோரிக்கையாளர்கள் தடுப்பு முகாம்களில் வைத்திருக்கும் முறையில் கடந்த 2017 ஜுன் முதல் 5 அறிக்கைகளை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. காலவரையறையற்ற தடுப்புக் காவலில் உள்ளவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என ...

Read More »

ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச் சாதனை!

டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரராக 900 புள்ளிகளை கடந்து ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச் சாதனை படைத்துள்ளார். டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியளில் 900 புள்ளிகளை கடந்த முதல் வீரர் எனும் சாதனையை ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரரும், டி20 போட்டிகளின் கேப்டனுமான ஆரோன் பின்ச் படைத்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்ற தொடரின் முடிவில் 891 புள்ளிகள் பெற்றிருந்தார். இதற்கிடையே ஆரோன் பின்ச், ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் பாகிஸ்தான், ஜிம்பாப்வே உடனான முத்தரப்பு டி20 போட்டியில் விளையாடி வருகிறார். ...

Read More »

நவுறு தடுப்பு முகாமிலிருந்து தமிழ்க் குடும்பம் உட்பட சில அகதிகள் அமெரிக்கா சென்றனர்!

அவுஸ்திரேலியாவின் நவுறு தடுப்பு முகாமிலுள்ள மேலும் சில அகதிகள் அமெரிக்கா சென்றுள்ளனர். ஒரு தமிழ் குடும்பம் உட்பட ஆப்கான், பாகிஸ்தான் மற்றும் ரொஹின்யா பின்னணி கொண்ட சுமார் 22 பேருகு அமெரிக்கா செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து இவர்கள் அனைவரும் அமெரிக்கா சென்றதாக Refugee Action Coalition அமைப்பின் பேச்சாளர் Ian Rintoul கூறியுள்ளார். அவுஸ்திரேலியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் அகதிகள், அமெரிக்காவின் வெவ்வேறு பகுதிகளில் குடியமர்த்தப்படுவார்கள். அங்கு செல்லும் அகதிகளுக்கு முதல் 3 மாதங்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் வழங்கப்படும். மேலும் ஒரு ...

Read More »

ஆஸ்திரேலியாவை வென்று முத்தரப்பு கோப்பையை கைப்பற்றிய பாகிஸ்தான்!

பகர் சமான், சோயிப் மாலிக்கின் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவை வென்று முத்தரப்பு கோப்பையை கைப்பற்றியது பாகிஸ்தான். ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வந்தது. லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் இரண்டு இடங்கள் பிடித்த பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஆர்கி ஷார்ட் (76), ஆரோன் பிஞ்ச் (47) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு ...

Read More »

55 மில்லியன் டொலரைக் கொடுத்த அதிஷ்டலாபச் சீட்டு!

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் Powerball அதிஷ்டலாபச் சீட்டிழுப்பில் சுமார் 55 மில்லியன் டொலர்களை வென்ற நபர் 175 நாட்கள் கழித்து தனது பரிசினைப் பெற்றுக் கொண்டுள்ளார். கடந்த ஜனவரி 11 ஆம் திகதி நடைபெற்ற சீட்டிழுப்பில் Powerball க்கான 12 ஆகிய இலக்கங்களைக் கொண்ட அதிஷ்டலாபச் சீட்டு 55 மில்லியன் டொலர்களை வென்றது. இந்தப் பரிசுத்தொகையை வென்றவர் யார் என்பது நீண்ட நாட்களாக வெளியில் வராமல் இருந்தது. இச்சீட்டிழுப்பில் வெல்லப்பட்ட தொகையை 6 மாதங்களுக்குள் யாரும் உரிமை கோரவில்லை என்றால் விக்டோரியாவின் State Revenue-விடம் ஒப்படைக்க ...

Read More »

இந்திய ஆக்கி அணிக்கு ஆஸ்திரேலிய ஜாம்பவானின் அறிவுரை!

நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி, கடந்த முறை போலவே அதே ஆஸ்திரேலிய அணியிடம் அதே ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் வீழ்ந்திருக்கிறது. இந்திய அணிக்கு இத்தொடரில் சில மகிழ்வூட்டும் விஷயங்களும் நடந்தன. அதாவது, ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினாவை வீழ்த்தியது, பரம வைரி பாகிஸ்தானை துவைத்தெடுத்தது, தர வரிசையில் உயர்ந்த பெல்ஜியத்துடன் சமன் செய்தது… போன்றவை. மீண்டும் ஒருமுறை இந்தியா கடைசிக்கட்டத்தில்தான் போராடி வீழ்ந்திருக்கிறது. நம்முடைய பலம், பலவீனத்தை நம்மை விட நம் எதிரி நன்றாக அறிவார் அல்லவா? இந்தியாவின் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் கார்களின் டயர்களை பதம்பார்த்த “உருகும் சாலை”

சாலையில் போடப்பட்டுள்ள கட்டித்தார் உருகி, வாகனங்களின் டயர்களில் ஒட்டியதால், ஆஸ்திரேலிய வாகன ஓட்டுநர்கள் தங்களுடைய வாகனங்களை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குயின்ஸ்லாந்திலுள்ள 50-க்கு மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு இது தொடர்பாக இழப்பீடு வழங்கப்படலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. “இதுபோல நான் இதுவரை பார்த்ததில்லை. நேற்று இது பற்றிய தகவல்கள் வர தொடங்கியவுடன் நம்ப முடியவில்லை” என்று உள்ளூர் மேயரான ஜோ பரோனல்லா பிபிசியிடம் தெரிவித்தார். வானிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் நிகழந்துள்ள இந்த சம்பவத்தால், கடந்த வாரம் தார் போடப்பட்ட சாலை சேதமடைந்துள்ளது. பல ...

Read More »

அவுஸ்திரேலியாவில் இரண்டு பிள்ளைகளைச் சுட்டுக்கொன்ற தந்தை!

அவுஸ்திரேலியாவில் இரண்டு பிள்ளைகளைச் சுட்டுக்கொன்ற தந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சிட்னி Pennant Hills பகுதியில் தமது படுக்கை அறைகளிலிருந்த 15 வயது மகன் மற்றும் 13 வயது மகளை 68 வயது தந்தை ஒருவர் சுட்டுக் கொன்றிருந்தார். அத்துடன் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நபரைத் தேடும் பணி பல மணிநேரங்களாக இடம்பெற்றது. இந்த நிலையில் இன்று Normanhurst பகுதியில் அவரது சடலம் மீட்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட சடலத்துக்கு அருகில் இரண்டு கைத்துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளது. அந்தக் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் புதிய சலுகை வழங்கும் திட்டம்!

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில், Energy Compare இணையத்தளத்துக்கு செல்பவர்களுக்கு, ஐம்பது டொலர்களை வழங்கும் திட்டம் இந்த மாதம் முதல் ஆரம்பமாகிறது. வீட்டு மின்சாரம் மற்றும் எரிவாயு பயன்பாடுகளை இணையத்தளத்தின் (https://compare.switchon.vic.gov.au) ஊடாக ஒப்பீடு செய்துகொள்ளும் முறையை பயனாளர்களிடம் அறிமுகப்படுத்துவதில் அரசு நாட்டம் காட்டுகிறது. இதனை ஊக்குவிக்கும் முகமாகவே விக்டோரிய அரசாங்கம் Energy Compare இணையத்தளத்துக்கு செல்பவர்களுக்கு 50 டொலர்களை வழங்கவுள்ளது. ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரையில் Energy Compare இணையத்தளத்தை பயன்படுத்துபவர்களுக்கு 50 டொலர் சன்மானம் வழங்கப்படுகிறது. இதேவேளை இந்த புதிய இனாம் ...

Read More »