அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் Powerball அதிஷ்டலாபச் சீட்டிழுப்பில் சுமார் 55 மில்லியன் டொலர்களை வென்ற நபர் 175 நாட்கள் கழித்து தனது பரிசினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
கடந்த ஜனவரி 11 ஆம் திகதி நடைபெற்ற சீட்டிழுப்பில் Powerball க்கான 12 ஆகிய இலக்கங்களைக் கொண்ட அதிஷ்டலாபச் சீட்டு 55 மில்லியன் டொலர்களை வென்றது. இந்தப் பரிசுத்தொகையை வென்றவர் யார் என்பது நீண்ட நாட்களாக வெளியில் வராமல் இருந்தது.
இச்சீட்டிழுப்பில் வெல்லப்பட்ட தொகையை 6 மாதங்களுக்குள் யாரும் உரிமை கோரவில்லை என்றால் விக்டோரியாவின் State Revenue-விடம் ஒப்படைக்க வேண்டும் என்பது சட்டமாகும்.
இந்த நிலையில் இதற்கு முன் குறித்த வெற்றியாளர் தனது ஆதாரத்தைக் காட்டி பரிசுத் தொகையை அள்ளிச் சென்றுள்ளார்.
இருப்பினும் பரிசுத் தொகையினை வாங்குவதற்கு எதற்கு காலதாமதப் படுத்தினார் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் அந்த அதிர்ஷ்டக்காரர் தான் யார் என்ற அடையாளத்தையும் வெளிக்காட்ட விரும்பவில்லை. ஆகவே இவ்வளவு பெரிய தொகையை வென்றது யார்?
அப்பணம் எவ்வாறு செலவிடப்படவிருக்கிறது? என்ற விபரங்கள் வெளியாகவில்லை.