அவுஸ்திரேலியாவிற்கு ஐநா மீண்டும் கண்டனம்!

அவுஸ்திரேலியா அகதிகளை நடாத்தும் முறை குறித்து ஐநா மீண்டும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

ஐ.நா வின் working group on arbitrary detention- தடுப்புக்காவல்களுக்கெதிரான செயற்பாட்டுக் குழு இந்தக் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியவர்களில் பலர் 9 ஆண்டுகளைக் கடந்தும் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். இது நியாயமற்ற செயல் என இக்குழு கண்டித்துள்ளது.

தஞ்சக்கோரிக்கையாளர்கள் தடுப்பு முகாம்களில் வைத்திருக்கும் முறையில் கடந்த 2017 ஜுன் முதல் 5 அறிக்கைகளை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

காலவரையறையற்ற தடுப்புக் காவலில் உள்ளவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

புகலிடம் தேடி வந்தவர்கள் காலவரையறை இன்றி தடுப்பில் வைத்திருப்பது சட்டத்திற்குப் புறம்பானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.