அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில், Energy Compare இணையத்தளத்துக்கு செல்பவர்களுக்கு, ஐம்பது டொலர்களை வழங்கும் திட்டம் இந்த மாதம் முதல் ஆரம்பமாகிறது.
வீட்டு மின்சாரம் மற்றும் எரிவாயு பயன்பாடுகளை இணையத்தளத்தின் (https://compare.switchon.vic.gov.au) ஊடாக ஒப்பீடு செய்துகொள்ளும் முறையை பயனாளர்களிடம் அறிமுகப்படுத்துவதில் அரசு நாட்டம் காட்டுகிறது.
இதனை ஊக்குவிக்கும் முகமாகவே விக்டோரிய அரசாங்கம் Energy Compare இணையத்தளத்துக்கு செல்பவர்களுக்கு 50 டொலர்களை வழங்கவுள்ளது.
ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரையில் Energy Compare இணையத்தளத்தை பயன்படுத்துபவர்களுக்கு 50 டொலர் சன்மானம் வழங்கப்படுகிறது.
இதேவேளை இந்த புதிய இனாம் வழங்கும் திட்டத்திற்கு விக்டோரிய அரசு 48 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது.
விக்டோரிய மாநிலத்தில் தேர்தல் நெருங்கிவருகின்றமையினாலேயே இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என எதிர்கட்சி கடுமையாக சாடியுள்ளது.