அவுஸ்ரேலியாவில் முதன்முறையாக, மனிதாபிமான விசாக்களில் (humanitarian visas) அகதிகளைத் தனியார் தொழில் நிறுவனங்கள் அழைக்கும் திட்டம் ஒன்று ஜூலை 1ம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. தனியார் நிறுவனங்கள், சமூகக் குழுக்கள் மற்றும் தனிநபர்கள் அனுசரனை அதாவது sponsor செய்தால், சுமார் 1000 வரையிலான அகதிகளை இங்கு அழைக்கும் ‘தனியார் sponsorship’ திட்டமொன்றை அவுஸ்ரேலிய அரசு கொண்டுவருகிறது. தேவைப்படும் பட்சத்தில், Centrelink பணம் ஏதாவது அக்குறிப்பிட்ட அகதி எடுக்க நேரிட்டால் அப்பணத்தையும் sponsor செய்த தனி நபரோ அல்லது நிறுவனமோ அல்லது சமூகக் குழுவோ மீளச் ...
Read More »அவுஸ்திரேலியமுரசு
அவுஸ்ரேலியாவில் 10 ஆண்டுகள் தங்க பெற்றோர் விசா தயார்!
பெற்றோர்களுக்கான புதிய விசா அறிமுகமாகிறது. இவ்வருட நவம்பர் மாதத்திலிருந்து இப்புதிய விசாக்கள் வழங்கப்படும். $20,000 செலுத்தினால் 10 ஆண்டுகள் இங்கே தங்கலாம். அறிமுகப்படுத்தப்படவுள்ள ஒரு புதிய விசாவின் கீழ், பெற்றோர்கள் 10 வருடங்கள் வரை அவுஸ்ரேலியாவில் தங்கலாம். ஆனால் அவர்கள் அவுஸ்ரேலியாவில் நிரந்தரமாகக் குடியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். அத்துடன் அவர்களின் பிள்ளைகள் தமது பெற்றோர்களுக்கான தனியார் சுகாதார காப்பீடு (private health cover) எடுக்கவேண்டும். Turnbull அரசாங்கத்தின் சமீபத்திய குடிவரவுகள் மீதான மாற்றங்களில் ஒன்றாகப் பெற்றோர்களுக்கான இப் புதிய விசா அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதன் படி ...
Read More »அவுஸ்ரேலியாவில் இந்திய ‘கேசர்’ மாம்பழங்களுக்கு அமோக வரவேற்பு!
இந்தியாவின் புகழ்பெற்ற ‘கேசர்’ வகை மாம்பழங்கள் முதன்முறையாக அவுஸ்ரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றின் இனிய சுவைக்கு அங்குள்ள மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. குளுமைப் பிரதேசமாக அறியப்படும் ஆஸ்திரேலியா நாட்டுக்கு மெக்சிகோ, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் மாம்பழங்களை ஏற்றுமதி செய்து வருகின்றன. மாம்பழ சாகுபடியில் படிப்படியாக முன்னேறிவரும் இந்தியாவும் உள்நாட்டு தேவைக்குப் போக மிஞ்சியுள்ள மாம்பழங்களை அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிலையில், நமது நாட்டில் ‘கனிகளின் ராஜா’ என்றழைக்கப்படும் மாம்பழங்களை முதன்முறையாக அல்போன்ஸா, கேசர் வகை மாம்பழங்களை ...
Read More »அவுஸ்ரேலியா செல்லும் அகதிகள் மத ரீதியான புறக்கணிப்பு!
அவுஸ்ரேலியா செல்லும் அகதிகள் மத ரீதியான புறக்கணிப்புக்கு உள்ளாவதாக த நியுயோர்க் டைம்ஸ் இணைத்தளம் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளது. இதற்கமைய இலங்கையை சேர்ந்த பல அகதிகளின் விண்ணப்பங்களும் அவுஸ்ரேலியாவில் பரிசீலிக்கப்படாமல், நீண்டகாலமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவுஸ்ரேலியாவில் அதிக அளவில் சிரியா மற்றும் ஈராக்கைச் சேர்ந்த ஏதிலிகளுக்கு துரிதமாக அகதி அந்தஸ்த்து வழங்கப்படுகின்றது. இருந்தபோதும், இவற்றுள் 78 சதவீதமானவர்கள் கிறிஸ்த்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அகதி அந்தஸ்த்து வழங்கப்படும் போது ஏனைய மதத்தினருக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை கூறப்பட்டுள்ளது. இதனால் தாய்நாட்டில் பல்வேறு இன்னல்களுக்க உள்ளான ஏனைய ...
Read More »அவுஸ்ரேலியாவில் முதன் முதலாக வீடு வாங்குவோருக்கு அரசு உதவி!
அவுஸ்ரேலியா நாட்டின் முக்கிய நகரங்களில் வீடுகளின் விலை மிகவும் அதிகரித்திருப்பதையடுத்து முதன்முதலாக வீடு வாங்குவோர் பெரும் நிதி நெருக்கடியை சந்திப்பதால் அவர்களுக்கு உதவும் வகையில் புதிய திட்டமொன்றை அரசு அடுத்த மாதம் Budget -நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது. ஒருவர் ஈட்டும் வருமானத்திற்கு வரி விதிக்கும் முன்பே அந்த சம்பளத்தின் அல்லது வருமானத்தின் ஒரு பகுதியை வீடுவாங்க அவர் சேமிக்கவும், அந்த சேமிப்பிற்கு அரசு வரி வசூலிப்பதில்லை என்பதாகவும் புதிய திட்டமொன்றை அரசு அறிவிக்கலாம் என்று தெரிகிறது.
Read More »அனிதா, குப்புசாமி இசை நிகழ்ச்சி!
கிராமியப் பாடல்களை மண்மணம் மாறாமல் நம்மிடையே கலைமாமணி டாக்டர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி குழுவினர் பலமேடைகளில் பாடி வருகிறார்கள். இவர்கள் இருவரும் அவுஸ்ரேலிய நாட்டின் சிட்னி வாழ் தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொள்ளும் சித்திரைத் திருவிழாவில் கலந்து கொள்கிறார்கள். சித்திரைத் திருவிழாவில் உள்ளூர் கலைஞர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், தமிழர் கண்காட்சி, இந்திய மற்றும் தமிழக உணவு வகைகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெறுகின்றன. நாள்: ஞாயிற்றுக்கிழமை, மே மாதம் 07ம் நாள். நேரம் : காலை 11 ...
Read More »அவுஸ்ரேலியா: அதிகரிக்கும் சூரிய மின்னுற்பத்தி!
அவுஸ்ரேலியாவில் கோடைகாலத்தை ஒட்டி மின் தட்டுப்பாடு அதிகரித்துவருகிறது. ஆனால் அதிலிருந்து தப்பிக்க விரும்பும் வீட்டு உரிமையாளர்கள் சூரியஒளி மின்சாரத்தை சேமிக்கும் பேட்டரிகளை நிறுவ ஆரம்பித்துள்ளனர். மின் தட்டுப்பாட்டிலிருந்து தப்ப வேண்டும் என்பதே பலரின் முதன்மையான நோக்கம். அதே சமயம் இதற்கு ஆகும் கூடுதல் செலவு முக்கிய காரணியாக திகழ்கிறது. இன்னொரு பக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் மின் கட்டணத்தை கட்டுவதா அல்லது அதிக பணத்தை ஒரேயடியாக செலவு செய்து சூரியஒளி மின்சாரத்தை சேமிக்கும் கட்டமைப்பை நிறுவி மின்கட்டணத்திலிருந்து மொத்தமாக தப்புவதா என்றும் சிலர் கணக்கு போடுகிறார்கள். ...
Read More »நவுரு தீவு ஒரு நரகம்! -ஈழ அகதியின் வேதனை!
நவுரு தீவு ஒரு நரகம் என அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியுள்ள இலங்கைத் தமிழர் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார். சட்டவிரோதமாக படகு மூலம் சென்றவர்கள் அவுஸ்ரேலியாவினால் நவுரு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த தடுப்பு முகாமிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இளைஞன் விக்டோரியாவில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றினார். இந்த நிகழ்வு அகதி நடவடிக்கை தொடர்பான அமைப்பு ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியா சென்ற இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளரான ரவி அங்கு கருத்து வெளியிட்ட போது 22 நாள் படகு பயணத்தில் தப்பித்த பின்னர் நவூருவில் ...
Read More »அவுஸ்ரேலியாவில் இருந்து ஈழம் நோக்கி பறக்கும் பறவைகள்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி, வட்டிமடு பிரதேசங்களில் குறித்த பறவைகளை காணக்கூடியதாக உள்ளது. இந்த வெளிநாட்டுப் பறவைகள் அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகளில் இருந்து இலங்கைக்கு படையெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலநிலை மாற்றத்தினால் குறித்த பறவைகள் இலங்கைக்கு வருகை தந்திருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த பறவைகளை காணும்போது மிகவும் அழகாக இருப்பதாகவும், கூட்டம் கூட்டமாக வருவதாகவும், நீர் நிலைகளில் அதிகம் காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
Read More »தனியாக அவுஸ்ரேலியாவை கடக்க முயன்ற 12 வயது சிறுவன்
அவுஸ்ரேலியாவில் 12 வயது சிறுவன் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இருந்து மேற்கு அவுஸ்ரேவின் பேர்த் நகருக்கு தனியாக வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். சிறுவன் ஆயிரத்து 1300 கிலோ மீற்றர் வரை பயணம் செய்திருந்த நிலையில், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் புரோகன் ஹில் பகுதியில் தடுத்து நிறுத்தி கைது செய்த காவல் துறை புரோகன் ஹில் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிறுவன் அப்போது நியூ சவுத் வேல்ஸின் கென்டால் பகுதியில் இருந்து அவுஸ்ரேலியாவில் பல முக்கியமான விவசாய பண்ணைகளளை கடந்து நெடுஞ்சாலை வழியாக ...
Read More »