மட்டக்களப்பு மாவட்டத்தில் வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி, வட்டிமடு பிரதேசங்களில் குறித்த பறவைகளை காணக்கூடியதாக உள்ளது.
இந்த வெளிநாட்டுப் பறவைகள் அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகளில் இருந்து இலங்கைக்கு படையெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலநிலை மாற்றத்தினால் குறித்த பறவைகள் இலங்கைக்கு வருகை தந்திருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பறவைகளை காணும்போது மிகவும் அழகாக இருப்பதாகவும், கூட்டம் கூட்டமாக வருவதாகவும், நீர் நிலைகளில் அதிகம் காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
Eelamurasu Australia Online News Portal