தனியாக அவுஸ்ரேலியாவை கடக்க முயன்ற 12 வயது சிறுவன்

அவுஸ்ரேலியாவில் 12 வயது சிறுவன் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இருந்து மேற்கு அவுஸ்ரேவின் பேர்த் நகருக்கு தனியாக வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.

சிறுவன் ஆயிரத்து 1300 கிலோ மீற்றர் வரை பயணம் செய்திருந்த நிலையில், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் புரோகன் ஹில் பகுதியில் தடுத்து நிறுத்தி கைது செய்த காவல் துறை புரோகன் ஹில் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சிறுவன் அப்போது நியூ சவுத் வேல்ஸின் கென்டால் பகுதியில் இருந்து அவுஸ்ரேலியாவில் பல முக்கியமான விவசாய பண்ணைகளளை கடந்து நெடுஞ்சாலை வழியாக நூற்றுக்கணக்கான கிலோ மீற்றர்கள் பயணம் செய்து புரோகன் ஹில் பகுதியில் சென்றுக்கொண்டிருந்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை நடந்துள்ளது. பெற்றோர் தமது மகனை காணவில்லை பொலிசில் புகார் அளித்துள்ளர்.

எங்கு நிறுத்தாது பயணம் செய்தாலும் பேர்த் செல்ல 40 மணிநேரம் எடுக்கும் எனக் கூறப்படுகிறது.

எவரும் சந்தேகம் கொள்ளாதபடி சிறுவன் தன்னை வயது வந்தவர் போல் காட்டிக்கொண்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சிறுவன் பார்க்கும் 19 முதல் 20 வயது மதிக்கத்தக்கவராக இருந்தால், கோபார் என்ற நகரத்தின் பெட்ரோல் நிரப்பும் நிலையத்தின் முகாமையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

சட்டத்தை மீறி வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக, இளம் குற்றவாளிகளின் தண்டனைச் சட்டத்தின் கீழ் இந்த சிறுவன் தண்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

 

1818 (1)