அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்ரேலியாவிற்கு விமானத்தில் பயணம் செய்யும் போது மைத்திரி!

சிங்கப்பூரில் இருந்து அவுஸ்ரேலியாவிற்கு விமானத்தில் பயணம் செய்யும்  போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படம் ஒன்று பிரதியமைச்சர் ஹர்ஷ டீ சில்வாவினால் எடுக்கப்பட்டு அவரது உத்தியோகப்பூர்வ முகநூல்  பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. குறித்த பதிவில், “நான் சிங்கப்பூரில் இருந்து அவுஸ்திரேலியா செல்லும் வர்த்தக விமானத்தில் இந்த புகைப்படத்தை எடுத்தேன். இலங்கை நாட்டின் ஜனாதிபதி இதற்கு முன்னர் அறியாத பயணிக்கு அடுத்தபடியாக, வியாபார வகுப்பில் அமர்ந்துள்ளார். நான் உண்மையாக நல்ல விடயத்தை உணர்ந்தேன். நான் பிரதமருடன் பலமுறை பயணம் செய்துள்ளேன். அவரும் அவரது மனைவி மைத்திரியும் இதே ...

Read More »

அவுஸ்ரேலியாவில் பலியான ஈழ புகலிடக் கோரிக்கையாளர்!

அவுஸ்ரேலியாவில், ஆஸ்துமா நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஈழத்தவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. அருள்செல்வம் வேல்முருகு என்ற 35 வயதுடைய ஈழ புகலிடக் கோரிக்கையாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த புகலிடக் கோரிக்கையாளருக்கு சிகிச்சை வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிகளே மரணத்திற்கு காரணம் என மேற்கு அவுஸ்திரேலிய மரண விசாரணை அதிகாரி பெரி கிங் தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் தீவு குடிவரவு தடுப்பு நிலையத்திற்கு சிகிச்சைகளுக்காக வருகை தந்த சில மணித்தியாலங்களுக்குள்ளேயே ஈழ புகலிடக் கோரிக்யைாளர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் ஆபத்தில் ஈழ அகதிகள்!

அவுஸ்ரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படும் ஆபத்தை ஈழம் உள்ளிட்ட அகதிகள் எதிர்நோக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தாமலும், அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பிக்காமல் இருப்பவர்களே இவ்வாறு நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதி அந்தஸ்த்து கோரி விண்ணப்பிக்காத நிலையில், 7500க்கும் மேற்பட்ட ஈழம் உள்ளிட்ட அகதிகள் அவுஸ்ரேலியாவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த அனைவருக்கும் ஒக்டோபர் மாதம் வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, குறித்த காலப்பகுதியில் தங்களை நியாயமான அகதிகள் என நிரூபிக்க ...

Read More »

அவுஸ்ரேலியாவில் மைத்திரிக்கு கன்பெராவில் வரவேற்பு!

அவுஸ்ரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லின் அழைப்பையேற்று மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவுஸ்ரேலியா பயணமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை கென்பராவைச் சென்றடைந்தார். ஆளுநர் நாயகத்தின் உத்தியோகபூர்வ செயலாளர் மார்க் பிரேசர், கல்வி அமைச்சரும் செனட் சபை உறுப்பினருமான சிமோன் பேர்மிங்ஹம், ஆளுநர் நாயகத்தின் பிரதிச் செயலாளர் எலிசபெத் கெலி ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்றனர். ஜனாதிபதி சிறிசேனவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடவும் இருதரப்பு கூட்டுறவை மேலும் விரிவுபடுத்துவதற்கான அவரது கருத்துக்களை அறிந்து கொள்ளவும் பிரதமர் மெல்கம் டேர்ன்புல் எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி  மைத்திரியை ...

Read More »

அவுஸ்ரேலியாவில் இந்திய சாரதி மீது இனவெறி தாக்குதல்!

அவுஸ்ரேலியாவின் தீவுப்பகுதியான டாஸ்மானியா நகரில் இந்தியாவை சேர்ந்த டாக்சி சாரதி  பெண் உள்பட இரு பயணிகள் கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த பிரதிப் சிங்(25) என்பவர் அவுஸ்ரேலியா நாட்டில் விருந்தோம்பல் தொடர்பான பட்டப்படிப்பு படித்து வருகிறார். படிப்பு நேரம் போக ஓய்வாக இருக்கும் வேளைகளில் தற்காலிகமாக வாடகை கார்களை ஓட்டி கைச்செலவுக்கு பணம் சம்பாதிப்பது வருகிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இவரது காரில் ஒரு பெண்ணுடன் ஒருவர் சவாரி சென்றுள்ளார். அவுஸ்ரேலியாவின் தீவுப்பகுதியான டாஸ்மானியா அருகேயுள்ள சாண்டி பே ...

Read More »

அவுஸ்ரேலியாவில் புகலிடம் கோரியோருக்கு காலக்கெடு!

அவுஸ்ரேலியாவிற்குள் படகுகள் மூலம் பிரவேசித்துள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு, அகதி அந்தஸ்துகோரி விண்ணப்பிப்பதற்கு அந்த நாட்டு அரசாங்கம் நான்கு மாத கால அவகாசம் வழங்கியுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதிக்கு முன்னதாக புகலிடக் கோரிக்கையாளர்கள் தமது பாதுகாப்புக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என அவுஸ்ரேலிய குடிவரசு அமைச்சர் பீற்றர் டட்டன் கூறியுள்ளார். ஸ்ரீலங்காவில் இருந்து போருக்கு முன்னரும் போரின் பின்னரும் ஆபத்தான கடல்வழிப்பயணங்களை  மேற்கொண்டு  ஆயிரக்கணக்கானவர்கள் அவுஸ்ரேலியாவில் புகலிட தஞ்சம் கோரியிருந்தனர். இலங்கையை தவிர ஏனைய ஆசிய மற்றும் ...

Read More »

தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – மெல்பேர்ண் & சிட்னி 2017

தமிழர் இனவழிப்பு நினைவு நாள் – மெல்பேர்ண் அவுஸ்திரேலியா மெல்பேர்ண்நகரில் உணர்வெழுசிசியுடன் நடைபெற்ற மே- 18 தமிழர் இனவழிப்பு நினைவேந்தல் நினைவுநாள். கடந்த 2009-ம்ஆண்டு மேமாதம் முள்ளிவாய்க்காலில் இறுதியுத்தநாட்களில் சிங்களப்பேரினவாதஅரசினால் தமிழ்மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவழிப்புப்போரின்போது காவுகொள்ளப்பட்ட பல ஆயிரக்கணக்கான தமிழ்மக்களின் எட்டாவது ஆண்டுநினைவுதினமும் காலத்திற்குக்காலம் சிங்களப்பேரினவாத அரசினால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் நினைவான தமிழர் இனவழிப்பு நினைவுநாளும் மெல்பேர்ண்நகரில் கங்கேரியன் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 18-05-2017அன்று மாலை 6.30மணிக்கு மண்டப நினைவேந்தல்நிகழ்வுகள் ஆரம்பமாகின. இந்நிகழ்வை செல்வி மது பாலா அவர்களும் (தமிழ்மொழியிலும்) திரு ...

Read More »

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்!

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 8 ஆம் ஆண்டு எட்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உலகெங்கும் பரந்து வாழுகின்ற உணர்வுள்ள தமிழர்களால் நினைவு கூரப்பட்டு வருகிறது. அந்த வகையில் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்.

Read More »

அவுஸ்ரேலியாவில் மனைவியை கொன்று உடலை குக்கரில் சமைத்த கணவர்

அவுஸ்ரேலியா நாட்டில் மனைவியை கொலை செய்த கணவன் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் சமைக்க முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்ரேலியாவில் உள்ள குபான்ஸ் லேண்ட் நகரை சேர்ந்தவர் மார்கஸ் வோல்க் (27). இவரது மனைவி மயாங் பிரசெப்யோ (23). இவர் இந்தோனேசியாவை சேர்ந்தவர். மார்கஸ் கப்பலில் சமையல்காரராக பணிபுரிந்தார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே மார்கசுக்கு குறைவான வருமானம் கிடைத்ததால் இருவரும் விபசார தொழிலில் ஈடுபட்டனர். இதனால் இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று ...

Read More »

உணவகம் முன்பு அவசரமாக உலங்கு வானூர்தியை தரை இறக்கிய விமானி!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மிகப்பிரபலமான மெக்டொனால்ட்ஸ் உணவக வளாகத்தில் திடீரெனஉலங்கு வானூர்தியை  தரை இறக்கிய விமானியால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ‘பசிவந்தால் பத்தும்பறந்து போகும்’ என்ற பழமொழி உண்டு. அதற்கு ஏற்ப ஒரு சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. பசியால் வாடிய விமானி ஒருவர் நடுவானில் பறந்து கொண்டிருந்த உலங்கு வானூர்தியை  துரித உணவகம் முன்பு இறக்கி உணவு பொருட்களை வாங்கி சென்றார். இச்சம்பவம் அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மிகப்பிரபலமான மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் நடந்தது. உணவக வளாகத்தில் திடீரென உலங்கு வானூர்தி ...

Read More »