அவுஸ்ரேலியா நாட்டில் மனைவியை கொலை செய்த கணவன் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் சமைக்க முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்ரேலியாவில் உள்ள குபான்ஸ் லேண்ட் நகரை சேர்ந்தவர் மார்கஸ் வோல்க் (27). இவரது மனைவி மயாங் பிரசெப்யோ (23). இவர் இந்தோனேசியாவை சேர்ந்தவர்.
மார்கஸ் கப்பலில் சமையல்காரராக பணிபுரிந்தார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே மார்கசுக்கு குறைவான வருமானம் கிடைத்ததால் இருவரும் விபசார தொழிலில் ஈடுபட்டனர்.
இதனால் இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இருந்தும் ஒரே வீட்டில் தங்கியிருந்தனர்.

இந்த நிலையில் மனைவி மயாங்கை மார்கஸ் வோல்க் கொலை செய்தார். பின்னர் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி ஒரு குக்கரில் போட்டு மின்சார அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. எனவே மின்சார அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு உடனடியாக சரி பார்க்கும்படி அழைத்தார். அங்கு வந்த ஊழியர் வீட்டில் துர்நாற்றம் வருகிறதே எனக்கேட்டார்.
அதற்கு முழு பன்றியை சமைத்துக் கொண்டு இருக்கிறேன். எனவே நாற்றத்தை பொறுத்துக் கொள்ளுங்கள் என்றார். ஆனால் சமையல் அறையை சுற்றி வினோதமான பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு ஊழியர் அதிர்ச்சி அடைந்தார்.
மின் இணைப்பை சரி செய்து விட்டு வெளியேறிய அவர் அதுகுறித்து காவல்துறை புகார் செய்தார். உடனே விரைந்து வந்த காவல்துறையினரிடம் நீங்கள் பரிசோதனை செய்யுங்கள். வீட்டின் பின்புறம் உள்ள நாய்களை அவிழ்த்து விட்டு வருகிறேன் என கூறிவிட்டு சென்றார்.
பின்புறம் வாசல் வழியாக சென்ற அவர் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். ரத்த போக்கு அதிகமாகவே அதே இடத்தில் அவர் உயிரிழந்தார். இதற்கிடையே, பரிசோதனை செய்த காவல் துறையினர் மனைவி உடல் வெட்டப்பட்டு குக்கரில் கொதித்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.
Eelamurasu Australia Online News Portal