உணவகம் முன்பு அவசரமாக உலங்கு வானூர்தியை தரை இறக்கிய விமானி!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மிகப்பிரபலமான மெக்டொனால்ட்ஸ் உணவக வளாகத்தில் திடீரெனஉலங்கு வானூர்தியை  தரை இறக்கிய விமானியால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

‘பசிவந்தால் பத்தும்பறந்து போகும்’ என்ற பழமொழி உண்டு. அதற்கு ஏற்ப ஒரு சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. பசியால் வாடிய விமானி ஒருவர் நடுவானில் பறந்து கொண்டிருந்த உலங்கு வானூர்தியை  துரித உணவகம் முன்பு இறக்கி உணவு பொருட்களை வாங்கி சென்றார்.

இச்சம்பவம் அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மிகப்பிரபலமான மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் நடந்தது. உணவக வளாகத்தில் திடீரென உலங்கு வானூர்தி வந்து இறங்கியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர்  அதில் இருந்து இறங்கிய விமானி நெய்யினால் தயாரிக்கப்பட்ட பர்கர்  உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்கினார். கடை ஊழியர்களுக்கு ‘குட்பை’ சொல்லிவிட்டு உலங்கு வானூர்தியில்  ஏறி பறந்து விட்டார்.

முன்னதாக அவரிடம் உங்கள் பெயர் என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு ‘ டான்’ என் ஸ்டைலாக கூறிய அவர் கையசைத்தபடி புறப்பட்டு சென்றார்.

அதற்கு முன்பு மெக்டொனால்ட் நிறுவனம் முன்பு தான் நிறுத்தியிருந்த உலங்கு வானூர்தியுடன் சேர்ந்து புகைப்படம்  எடுத்துக் கொண்டார். காணொளியும் எடுக்கப்பட்டு சமூகவலை தளங்களில் அது வெளியிடப்பட்டது.

அவரிடம் ஒரு வானொயியில் பேட்டி கேட்கப்பட்டது. அப்போது உணவகத்தில் உலங்கு வானூர்தியை  தரை இறக்க நிறுவனத்திடம் அனுமதி பெற்றேன் என்றும் கூறினார்.