அவுஸ்திரேலியமுரசு

புகலிடக்கோரிக்கையாளர் குடும்பத்துக்கு நஷ்டஈடு கொடுத்த அவுஸ்திரேலிய அரசு!

புகலிடக்கோரிக்கையாளர் குடும்பம் ஒன்றுக்கு ஒரு லட்சம் டொலர்களை அவுஸ்திரேலிய அரசு ஈரானைச் சேர்ந்த குடும்பம் ஒன்றுககு நஷ்ட ஈடாக வழங்கியுள்ளது. அவுஸ்திரேலிய குடிவரவு தடுப்பு முகாம்களில் குறித்த குடும்பத்தினர் இருந்த நிலையில் நடத்தப்பட்ட முறை தொடர்பில் தொடரப்பட்ட வழக்கினையடுத்து நியூசவுத் வேல்ஸ் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது. குறித்த குடும்பத்தினர் தடுப்பு முகாம்களில் அனுபவித்த மற்றும் பார்த்த அதிர்ச்சிகரமான சம்பவங்களுக்காக நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 2010ம் ஆண்டு புகலிடம் கோரி ஈரானிலிருந்து வந்த குறித்த குடும்பம் 2010-2011 வரையான காலப்பகுதியில் கிறிஸ்மஸ் தீவு, ...

Read More »

அவுஸ்திரேலியாவில் உணவகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ஆபத்து!

அவுஸ்திரேலியாவில் உள்ள Fast-Food உணவகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுப்பபதாக தெரிவிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்களிடமிருந்து சில வேளைகளில் கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டது எனவும் நாடளாவிய ரீதியில் இந்த உணவகங்களில் பணிபுரிபவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் இருந்து பகீர் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆத்திரம் கொண்ட வாடிக்கையாளர்கள் உடல் ரீதியான தாக்குதல்களை நடத்துகின்றனர் எனவும் தெரியவந்துள்ளது. வேறு சிலர் தேனீர் போன்ற சுடுபானங்கள், burger போன்ற உணவுப்பொருட்கள், சிகரெட்களை பணியாளர்களின் மீது எறிவதாகவும், அத்துடன் பாலியல் ரீதியான சொற்களை பிரயோகிக்கின்றனர் எனவும் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை உணவங்களில் ...

Read More »

கங்காருவை இழந்து வாடும் அவுஸ்திரேலிய மக்கள்!

அவுஸ்திரேலியாவில், தனது கட்டுடலால் இணையத்தில் பிரபலமாகிய ரோஜர் என்றழைக்கப்படும் கங்காரு, நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளது. 12 வயதான குறித்த கங்காருவே இவ்வாறு உயிரிழந்துள்ளது. அவுஸ்திரேலியாவின் Kangaroo Sanctuary Alice Springs அந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. 90 கிலோ எடையும் 2 மீட்டர் உயரமும் கொண்ட கங்காரு இணையவாசிகளின் செல்ல கங்காருவாக காணப்பட்டது. 2015இல் ரோஜர் உலோக வாளி ஒன்றை உடைப்பதைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவியது. அதனைத் தொடர்ந்து ரோஜரின் சாகசங்களைக் காட்டும் காணொளிகள் இணையவாசிகளிடையே மிகவும் பிரபலமடைந்தன. முதுமையின் காரணமாக ரோஜர் மாண்டதாக, ...

Read More »

தோல்வியைத் தவிர்க்க ஆஸ்திரேலியா போராட்டம்!

அலெய்டில் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இறுதி நாளான இன்று 7 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடி வருகிறது. ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 250 ரன்களும், ஆஸ்திரேலியா 235 ரன்களும் சேர்த்தன. 15 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 307 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. 323 ரன்கள் அடித்தால் வெற்றி ...

Read More »

உலகில் முதல் முறையாக அவுஸ்திரேலியாவில் அறிமுகமாகும் சட்டம்!

கணினி தொழில்நுட்ப முறையில் பாதுகாக்கப்பட்ட தகவல்களை உடைப்பதற்கு தேவையான அதிகாரத்தை  காவல் துறை  பாதுகாப்பு முகவர் நிலையங்களுக்கும் வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுவிடயம் தொடர்பான சர்ச்சைக்குரிய சட்டமூலம் ஒன்றை அவுஸ்திரேலியா நேற்று நிறைவேற்றியுள்ளது. இவ்வாறான ஒரு சட்டம் நிறைவேற்றப்படுவது உலக நாடுகள் மத்தியில் முதற்தடவையான சந்தர்ப்பம் என்று குறிப்பிடப்படுகிறது. பயங்கரவாதம் மற்றும் பாரிய குற்றச்செயல்களை தடுப்பதற்கு பாதுகாப்பான தகவல்களை உடைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

Read More »

துப்பாக்கியை உடனடியாக நீக்குங்கள்! – குயின்ஸ்லாந்து காவல் துறை

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள விளம்பர பலகையிலிருந்து துப்பாக்கி படத்தை நீக்குமாறு விளம்பரதாரர்களிடம் குயின்ஸ்லாந்து காவல் துறை ஆணையாளர் Ian Stewart கோரியுள்ளார். இறுக்கமான துப்பாக்கி மற்றும் ஆயுத தடைகளை பேணுகின்ற அவுஸ்திரேலியாவில் இவ்வாறான விளம்பரங்கள் தேவையற்றது என தெரிவித்துள்ளார். இவ்வாறான விளம்பரங்கள் மூலம் தூண்டுதல்களை மக்களுக்கு ஏற்படுத்தக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை அவரது கருத்துக்கு இணையதளவாசிகள் பலர் விமர்சனம் கூறி வருகின்றனர். இருப்பினும் ஏனையவர்கள் விழித்துக்கொள்வதற்கு முதல் நாங்கள் விழித்துக்கொள்ளவேண்டும் என குயின்ஸ்லாந்து காவல் துறை ஆணையாளர் Ian Stewart தெரிவித்துள்ளார்.

Read More »

ஆஸ்திரேலியாவை 235 ஓட்டங்களில் சுருட்டியது இந்தியா!

அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி தனது நேர்த்தியான பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவை 235 ரன்களில் சுருட்டியது. ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, புஜாரா (123) சதத்தால் 250 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஆரோன் பிஞ்ச் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின் வந்த கவாஜா 28 ரன்னிலும், ஷேன் மார்ஷ் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ...

Read More »

அவுஸ்திரேலியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து!

அவுஸ்திரேலியாவில் நோய்த்தாக்கம் ஒன்று எந்நேரமும் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. Thunderstorm ஆஸ்துமா எனப்படும் கொடிய ஆஸ்துமா நோய்த்தாக்கமே இவ்வாறு ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகரித்துவரும் வெப்பநிலையோடு காற்றில் மகரந்த துணிக்கைகளின் செறிவும் கூடும்போது குளிர்காற்றும் சேர்ந்துகொண்டால் இந்த நோய் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளது. ஏற்கனவே பல சுகாதார அமைப்புக்கள் அங்கு வாழும் மக்களுக்கு அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது அவுஸ்திரேலியா முழுவதும் சீரற்ற காலநிலையும் காற்றும் அதிகரித்துவருகின்றது. இது thunderstorm ஆஸ்துமா தாக்குதலை மீண்டும் ஏற்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. காலநிலை மாற்றங்களினால் ஏற்படுகின்ற சுமார் இரண்டாயிரம் ...

Read More »

மெல்போர்னில் உதயமான 2வது சர்வதேச விமான நிலையம்!

மெல்போர்னின் இரண்டாவது விமானநிலையமான Avalon, நேற்று (05) உத்தியோகப்பூர்வமாக தனது சர்வதேச விமானசேவையை ஆரம்பித்தது. Avalon விமான நிலையத்தில் இன்று காலை 8.20 மணியளவில் முதலாவது சர்வதேச விமானம் பயணிகளுடன் வந்திறங்கியமை குறிப்பிடத்தக்கது. மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து புறப்பட்ட AirAsia X Flight D7218 என்ற விமானம் Avalon விமானநிலையத்தில் வந்திறங்கிய முதலாவது சர்வதேச விமானம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இன்று (புதன்கிழமை) முதல் சர்வதேச விமான நிலையமாக இயங்கவுள்ள Avalon விமான நிலையமூடாக முதலாண்டில் 50 ஆயிரம் பயணிகள் தமது பயணங்களை மேற்கொள்வார்கள் எனக் ...

Read More »

ஆஸ்திரேலிய அணியில் 6 வயது சிறுவன்!

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள 6 வயது சிறுவனின் ஆசையை பூர்த்தி யெய்யும் வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் இணைந்து பயிற்சி செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியையொட்டி ஆஸ்திரேலிய அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் இணைந்து ஆஸ்திரேலிய சீருடையுடன் 6 வயது சிறுவனும் துருதுருவென வலம் வருவதை பார்க்க முடிகிறது. யார் அந்த சிறுவன் என்று விசாரித்தபோது, அந்த சிறுவனின் பெயர் ஆர்ச்சி ஷில்லர் என்பதும், இதய பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள அவனுக்கு இதுவரை 13 முறை ஆபரேஷன் நடந்திருக்கும் அதிர்ச்சி தகவலும் ...

Read More »