அலெய்டில் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இறுதி நாளான இன்று 7 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடி வருகிறது.
ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 250 ரன்களும், ஆஸ்திரேலியா 235 ரன்களும் சேர்த்தன. 15 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 307 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இந்நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய ஷேன் மார்ஷ் அரை சதம் கடந்தார். ஆனால் அவர் 60 ரன்களில் விக்கெட்டை இழந்தார். முன்னதாக ஹெட் 14 ரன்களிலும் அவுட் ஆனார். விக்கெட்டை காப்பாற்ற கடுமையாக போராடிய டிம் பெயின் 41 ரன்கள் சேர்த்த நிலையில், அவரது விக்கெட்டை பும்ரா கைப்பற்றினார். 187 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்ததால் ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. தோல்வியைத் தவிர்க்க போராடி வருகின்றனர்.
Eelamurasu Australia Online News Portal