அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள விளம்பர பலகையிலிருந்து துப்பாக்கி படத்தை நீக்குமாறு விளம்பரதாரர்களிடம் குயின்ஸ்லாந்து காவல் துறை ஆணையாளர் Ian Stewart கோரியுள்ளார்.
இறுக்கமான துப்பாக்கி மற்றும் ஆயுத தடைகளை பேணுகின்ற அவுஸ்திரேலியாவில் இவ்வாறான விளம்பரங்கள் தேவையற்றது என தெரிவித்துள்ளார்.
இவ்வாறான விளம்பரங்கள் மூலம் தூண்டுதல்களை மக்களுக்கு ஏற்படுத்தக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை அவரது கருத்துக்கு இணையதளவாசிகள் பலர் விமர்சனம் கூறி வருகின்றனர்.
இருப்பினும் ஏனையவர்கள் விழித்துக்கொள்வதற்கு முதல் நாங்கள் விழித்துக்கொள்ளவேண்டும் என குயின்ஸ்லாந்து காவல் துறை ஆணையாளர் Ian Stewart தெரிவித்துள்ளார்.