மெல்போர்னின் இரண்டாவது விமானநிலையமான Avalon, நேற்று (05) உத்தியோகப்பூர்வமாக தனது சர்வதேச விமானசேவையை ஆரம்பித்தது.
Avalon விமான நிலையத்தில் இன்று காலை 8.20 மணியளவில் முதலாவது சர்வதேச விமானம் பயணிகளுடன் வந்திறங்கியமை குறிப்பிடத்தக்கது.
மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து புறப்பட்ட AirAsia X Flight D7218 என்ற விமானம் Avalon விமானநிலையத்தில் வந்திறங்கிய முதலாவது சர்வதேச விமானம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இன்று (புதன்கிழமை) முதல் சர்வதேச விமான நிலையமாக இயங்கவுள்ள Avalon விமான நிலையமூடாக முதலாண்டில் 50 ஆயிரம் பயணிகள் தமது பயணங்களை மேற்கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.
Eelamurasu Australia Online News Portal