அவுஸ்திரேலியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து!

அவுஸ்திரேலியாவில் நோய்த்தாக்கம் ஒன்று எந்நேரமும் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Thunderstorm ஆஸ்துமா எனப்படும் கொடிய ஆஸ்துமா நோய்த்தாக்கமே இவ்வாறு ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகரித்துவரும் வெப்பநிலையோடு காற்றில் மகரந்த துணிக்கைகளின் செறிவும் கூடும்போது குளிர்காற்றும் சேர்ந்துகொண்டால் இந்த நோய் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளது.

ஏற்கனவே பல சுகாதார அமைப்புக்கள் அங்கு வாழும் மக்களுக்கு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது அவுஸ்திரேலியா முழுவதும் சீரற்ற காலநிலையும் காற்றும் அதிகரித்துவருகின்றது.

இது thunderstorm ஆஸ்துமா தாக்குதலை மீண்டும் ஏற்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றங்களினால் ஏற்படுகின்ற சுமார் இரண்டாயிரம் நோய்த்தாக்கங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்களின் சுகாதார சிக்கல்களும் அவற்றின் மீதான ஆராய்ச்சியும் என்ற தலைப்பில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கையிலேயே குறிப்பிட்ட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றங்கள் மற்றும் ஏனைய காரணங்களினால் மூச்செடுப்பதில் சிரமங்களை எதிர்நோக்குபவர்கள், ஆஸ்துமா நோயுள்ளவர்கள் ஆகியோர் இந்த தாக்குதலில் இருந்து தப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் சுகாதர தரப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதற்காக எந்நேரமும் puffers போன்றவற்றை கையோடு வைத்திருக்கும்டி வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் இடம்பெற்ற Thunderstorm ஆஸ்துமா தாக்குதலினால் சுமார் 1400 பேர் பாதிக்கப்பட்டனர்.

அவர்கள் நாடெங்கிலுமுள்ள பல்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மெல்பேர்னில் மாத்திரம் 10 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.