உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள 6 வயது சிறுவனின் ஆசையை பூர்த்தி யெய்யும் வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் இணைந்து பயிற்சி செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியையொட்டி ஆஸ்திரேலிய அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் இணைந்து ஆஸ்திரேலிய சீருடையுடன் 6 வயது சிறுவனும் துருதுருவென வலம் வருவதை பார்க்க முடிகிறது. யார் அந்த சிறுவன் என்று விசாரித்தபோது, அந்த சிறுவனின் பெயர் ஆர்ச்சி ஷில்லர் என்பதும், இதய பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள அவனுக்கு இதுவரை 13 முறை ஆபரேஷன் நடந்திருக்கும் அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது.
‘லெக்-ஸ்பின்னர்’ ஆக வேண்டும் என்பது அவனது விருப்பம். அவனது உடல்நிலையையும், கிரிக்கெட் ஆவலையும் தனியார் அமைப்பு மூலம் அறிந்து கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், அவனை தங்கள் அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சி செய்ய அனுமதித்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal