அவுஸ்திரேலியாவில், தனது கட்டுடலால் இணையத்தில் பிரபலமாகிய ரோஜர் என்றழைக்கப்படும் கங்காரு, நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளது.
12 வயதான குறித்த கங்காருவே இவ்வாறு உயிரிழந்துள்ளது. அவுஸ்திரேலியாவின் Kangaroo Sanctuary Alice Springs அந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
90 கிலோ எடையும் 2 மீட்டர் உயரமும் கொண்ட கங்காரு இணையவாசிகளின் செல்ல கங்காருவாக காணப்பட்டது.
2015இல் ரோஜர் உலோக வாளி ஒன்றை உடைப்பதைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவியது.
அதனைத் தொடர்ந்து ரோஜரின் சாகசங்களைக் காட்டும் காணொளிகள் இணையவாசிகளிடையே மிகவும் பிரபலமடைந்தன.
முதுமையின் காரணமாக ரோஜர் மாண்டதாக, The Kangaroo Sanctuary-இன் நிறுவனர் தெரிவித்தார்.
ரோஜரின் இறப்பு மிகவும் கவலைக்குரியது என தெரிவிக்கப்படுகின்றது. ரோஜர் உலகம் முழுவதும் பலரால் நேசிக்கப்பட்டு வந்தது. அது இறந்தாலும், பலரின் உள்ளங்களில் தொடர்ந்து வாழும் என குறிப்பிடப்பட்டுள்ளது.