அவுஸ்திரேலியாவில் உள்ள Fast-Food உணவகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுப்பபதாக தெரிவிக்கப்படுகிறது.
வாடிக்கையாளர்களிடமிருந்து சில வேளைகளில் கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டது எனவும் நாடளாவிய ரீதியில் இந்த உணவகங்களில் பணிபுரிபவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் இருந்து பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஆத்திரம் கொண்ட வாடிக்கையாளர்கள் உடல் ரீதியான தாக்குதல்களை நடத்துகின்றனர் எனவும் தெரியவந்துள்ளது.
வேறு சிலர் தேனீர் போன்ற சுடுபானங்கள், burger போன்ற உணவுப்பொருட்கள், சிகரெட்களை பணியாளர்களின் மீது எறிவதாகவும், அத்துடன் பாலியல் ரீதியான சொற்களை பிரயோகிக்கின்றனர் எனவும் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை உணவங்களில் பணிபுரியும் இளம்பெண்களே இந்தப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கின்றனர் எனவும் அத்துடன் 17 வயதுக்கும் குறைந்தவர்களே அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர் எனவும் கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.