கணினி தொழில்நுட்ப முறையில் பாதுகாக்கப்பட்ட தகவல்களை உடைப்பதற்கு தேவையான அதிகாரத்தை காவல் துறை பாதுகாப்பு முகவர் நிலையங்களுக்கும் வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதுவிடயம் தொடர்பான சர்ச்சைக்குரிய சட்டமூலம் ஒன்றை அவுஸ்திரேலியா நேற்று நிறைவேற்றியுள்ளது.
இவ்வாறான ஒரு சட்டம் நிறைவேற்றப்படுவது உலக நாடுகள் மத்தியில் முதற்தடவையான சந்தர்ப்பம் என்று குறிப்பிடப்படுகிறது.
பயங்கரவாதம் மற்றும் பாரிய குற்றச்செயல்களை தடுப்பதற்கு பாதுகாப்பான தகவல்களை உடைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.