ஆஸ்திரேலியாவில் கூட்டத்துக்குள் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் 3 சிறுமிகளும், சிறுவனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஆஸ்திரேலியாவில் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகர் சிட்னியில் உள்ள ஒரு வீதியில் சாலையோர நடைபாதை மீது சிறுவர், சிறுமிகள் 7 பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக கடைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த சாலையில் அதிவேகத்தில் வந்த கார் ஒன்று நடைபாதை மீது ஏறி சிறுவர், சிறுமிகள் கூட்டத்துக்குள் பாய்ந்தது. இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் 8 முதல் 12 வயதுக்குட்பட்ட ...
Read More »அவுஸ்திரேலியமுரசு
தஞ்சமடைய முயற்சிப்பவர்களை ‘ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்த மாட்டோம்!
ஆஸ்திரேலியா- அமெரிக்கா இடையே ஏற்பட்ட அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவில் மீள்குடியேற்றப்பட்ட அகதிகள், தற்போது மனுஸ்தீவு மற்றும் நவுருத்தீவில் இருக்கும் அகதிகளை அமெரிக்கா வர வேண்டாம் என எச்சரிப்பதாகக் கூறுகிறார் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன். “இதுகுறித்து என்னால் எதுவும் செய்ய முடியாது,” எனக் கூறும் பீட்டர் டட்டன், பப்பு நியூ கினியா மற்றும் நவுருத்தீவுகளில் உள்ள அகதிகளை வெளியேற்ற நான் நினைத்துக்கொண்டிருக்கும் பொழுது இப்படியான செயல் தன்னை சினங்கொள்ள வைப்பதாக சுட்டிக்காட்டியிருக்கிறார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா ஆட்சியின் இறுதிக்காலக்கட்டத்தில் ...
Read More »சீனாவிலிருந்து வரும் வெளிநாட்டவர் ஆஸ்திரேலியாவுக்கு வரத் தடை!
சீனாவில் கரோனா வைரஸ் பரவிய பகுதிகளிருந்து வரும் வெளிநாட்டவருக்கு சுமார் இரண்டு வாரத்திற்கு ஆஸ்திரேலியாவுக்கு வருகை தரக்கூடாது என்று அந்நாடு தடை விதித்துள்ளது. இதுகுறித்தான அறிவிப்பை ஆஸ்திரேலியப் பிரதமர் மோரிசன் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ஸ்காட் மோரிசன் கூறும்போது, “ சீனாவில் கரோனா வைரஸ் பரவிய நகரிலிருந்து வருபவர்கள் இரு வாரங்களுக்கு ஆஸ்திரேலியாவுக்குள் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த முடிவு மூத்த மருத்துவ ஆலோசகர்களிடம் ஆலோசனை பெற்ற பிறகே எடுக்கப்பட்டது” என்றார். ஆஸ்திரேலியாவில் இதுவரை 12 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் ...
Read More »முகுருசாவை வீழ்த்தி முதல் கிரேண்ட் ஸ்லாம் பட்டத்தை தனதாக்கினார் கெனின்!
மெல்போர்னில் இடம்பெற்று வரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்ன்ஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் சம்பியன் பட்டத்தை சோபியா கெனின் தட்டிச் சென்றுள்ளார். அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் இன்று இடம்பெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 15 ஆவது இடத்தில் இருக்கும் 21 வயதான அமெரிக்கா வீரங்கனை சோபியா கெனினும் தரவரிசையில் 32 ஆவது இடத்தில் இருக்கும் 26 வயதான ஜேர்மனி வீராங்கனை கர்பீன் முகுருசாவும் ஒருவரை ஒருவர் எதிர்த்தாடினர். சுமார் 2 மணித்தியாலங்களும் 03 நிமிடங்களும் நீடித்த இந்த ஆட்டத்தின் ...
Read More »ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 1,730 வெளிநாட்டினர் தடுத்து நிறுத்தம்!
பாதுகாப்பு விசா மூலம் ஆஸ்திரேலியாவுக்குள் செல்பவர்கள் பலத்த சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. இதன் மூலம், கடந்த ஆறு மாதத்தில் 1,730 பேரை ஆஸ்திரேலியாவுக்குள் நுழைவதிலிருந்து ஆஸ்திரேலிய எல்லைப்படையும் உள்துறையும் தடுத்து நிறுத்தியுள்ளது. இவர்கள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர் அல்லது சர்வதேச விமான நிலையங்களிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த 2018- 19 நிதியாண்டில், இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் 387 பேர் விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டில், 205 பேர் மட்டுமே ...
Read More »ஆஸ்திரேலியா ஓபன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் டொமினிக் தீம்!
மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிசில் டொமினிக் தீம் ஸ்வேரேவ்-ஐ வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 2-வது அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் ஐந்தாம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் – 7-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வேரேவ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இருவரும் முன்னணி வீரர்கள் என்பதால் ஆட்டம் தொடங்கியதில் இருந்தே பரபரப்பாக சென்றது. முதல் செட்டை ஸ்வேரேவ் 6-3 எனக் ...
Read More »அவுஸ்திரேலிய காட்டுத் தீ ! கான்பராவில் அவசர காலநிலை பிரகடனம்!
அவுஸ்திரேலியாவின், கான்பராவிற்கு தெற்கே பாரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளமையினால் அதிகாரிகள் கான்பராவிற்கு அவசரகால நிலைமைய பிரகடனப்படுத்தியுள்ளனர். கான்பராவில் கடந்த 2003 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மிக மோசமான காட்டுத் தீயாக இதனை தெரிவித்துள்ளனர். இதனால் கான்பராவின் புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேற்றம் குறித்து அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிட்னிக்கும் மெல்போர்னுக்கும் இடையில் அமைந்துள்ள இந்த சிறிய பிரதேசத்தில் சுமார் 400,000 குடியிருப்பாளர்கள் உள்ளனர். 2003 ஆம் ஆண்டில், கான்பராவின் புறநகர்ப் பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர், மேலும் 500 ...
Read More »ஆஸ்திரேலியாவில் குடியுரிமைக் கோருபவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி !
ஆஸ்திரேலியாவில் குடியுரிமைப் பெறுவது, ஆஸ்திரேலியாவுக்கு செல்லக்கூடிய பெரும்பாலான குடியேறிகளின் நோக்கமாக இருந்து வருகின்றது. ஆனால், ஆஸ்திரேலிய அரசின் கடுமையான கட்டுப்பாட்டால் குடியுரிமைக்கு விண்ணப்பவர்களின் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை குடியுரிமைத் தொடர்பான புள்ளிவிவரம் விவரிக்கிறது. கடந்த 2018-19 நிதியாண்டில் ஆஸ்திரேலிய குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ள குடியேறிகளின எண்ணிக்கை 138,387 ஆகும். அதுவே, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 42 சதவீதம் வீழ்ச்சியடைந்து காணப்படுகின்றது. கடந்த 2017- 18 நிதியாண்டில் 239,413 குடியேறிகள் குடியுரிமைக் கோரி விண்ணப்பித்திருக்கின்றனர். இதுவே, கடந்த 5 ஆண்டுகளில் அதிகபட்ச எண்ணிக்கையை இருக்கின்றது. இந்த ...
Read More »பிக் பாஷ் டி20 லீக்: எலிமினேட்டர் சுற்றில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியை வீழ்த்தியது சிட்னி தண்டர்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக்கின் எலிமினேட்டர் சுற்றில் ஹொபார்ட் ஹரிகேன்ஸ் அணியை 57 ரன்னில் வீழ்த்தியது சிட்னி தண்டர். பிக் பாஷ் டி20 லீக்கில் எலிமினேட்டர் போட்டி இன்று ஹோபார்ட் நகரில் நடைபெற்றது. ஹோபார்ட்டில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிட்னி தண்டர் – ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி தண்டர் பேட்டிங்கை தேர்வு செய்தது. உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ...
Read More »கொரோனோ வைரசினை பிரதிபலிக்கும் வைரசினை உருவாக்கியுள்ளதாக அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் அறிவிப்பு!
கொரோனோவைரசினை பிரதிபலிக்கும் வைரசினை அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். முக்கியமான இந்த முயற்சி காரணமாக கொரோனோவைரசிற்கான தடுப்புமருந்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் துரிதமாகலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெல்பேர்னின் பீட்டர் டொகெட்ரி நிறுவகத்தை சேர்ந்த விஞ்ஞானிகளே கொரோனோ வைரசினை பிரதிபலிக்கும் வைரஸ்களை உருவாக்கியுள்ளனர் தொற்று நோய்க்கு உள்ளான நபர் ஒருவர் மூலம் ஆய்வுகூடத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் வைரஸ் குறித்த சரியான தகவலை பெற்றுக்கொள்ள உதவும் என எதிர்பார்ப்பு வெளியாகியுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆராய்ச்சியாளர்களுடன் இந்த வைரசினை ...
Read More »