பிக் பாஷ் டி20 லீக்: எலிமினேட்டர் சுற்றில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியை வீழ்த்தியது சிட்னி தண்டர்!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக்கின் எலிமினேட்டர் சுற்றில் ஹொபார்ட் ஹரிகேன்ஸ் அணியை 57 ரன்னில் வீழ்த்தியது சிட்னி தண்டர்.

பிக் பாஷ் டி20 லீக்கில் எலிமினேட்டர் போட்டி இன்று ஹோபார்ட் நகரில் நடைபெற்றது. ஹோபார்ட்டில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிட்னி தண்டர் – ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி தண்டர் பேட்டிங்கை தேர்வு செய்தது.

உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும்  தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

கவாஜா 34 பந்தில் 54 ரளுகளும், ஹேல்ஸ் 37 பந்தில் 60 ரன்களும விளாசினர். கேப்டன் பெர்குசன் 22 பந்தில் 23 ரன்களும், ஆல்-ரோஸ் 21 ரன்களும் அடிக்க சிட்னி தண்டர்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது

பின்னர் 198 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹோபார்ட் அணியின் மேத்யூ வடே, டி’அர்கி ஷார்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சிட்னி தண்டரின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தன. இதனால் சிட்னி தண்டர் 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.