கொரோனோ வைரசினை பிரதிபலிக்கும் வைரசினை உருவாக்கியுள்ளதாக அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் அறிவிப்பு!

கொரோனோவைரசினை பிரதிபலிக்கும் வைரசினை அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

முக்கியமான இந்த முயற்சி காரணமாக கொரோனோவைரசிற்கான தடுப்புமருந்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் துரிதமாகலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மெல்பேர்னின் பீட்டர் டொகெட்ரி நிறுவகத்தை சேர்ந்த விஞ்ஞானிகளே கொரோனோ வைரசினை பிரதிபலிக்கும் வைரஸ்களை உருவாக்கியுள்ளனர்

தொற்று நோய்க்கு உள்ளான நபர் ஒருவர் மூலம் ஆய்வுகூடத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் வைரஸ் குறித்த சரியான தகவலை பெற்றுக்கொள்ள உதவும் என எதிர்பார்ப்பு வெளியாகியுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆராய்ச்சியாளர்களுடன் இந்த வைரசினை அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் பகிர்ந்துகொள்ளவுள்ளனர் .

டிசம்பரின் குபேய் மாநிலத்தில் பரவத்தொடங்கிய கொரோனோவைரசின் மரபணு வரிசையை சீனா விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

எனினும் தங்களுடைய முயற்சி கொரோனோ வைரஸ் குறித்த பலவிடயங்களை அறிந்துகொள்வதற்கு மிக முக்கியமானதாகஅமையும் என பீட்டர் டொகெட்ரி நிறுவகத்தின்தலைவர் யூலியன் டுரூஸ் தெரிவித்துள்ளார்.

எங்களிடம் உண்மையான வைரஸ்உள்ளதன் காரணமாக அனைத்து சோதனை முறைகளையும் மாற்றியமைத்து சரிபார்க்கவும், அவற்றின் உணர்திறன் மற்றும் தனித்துவங்களை ஒப்பிட்டு பார்க்கவும் முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.