மெல்போர்னில் இடம்பெற்று வரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்ன்ஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் சம்பியன் பட்டத்தை சோபியா கெனின் தட்டிச் சென்றுள்ளார்.
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் இன்று இடம்பெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 15 ஆவது இடத்தில் இருக்கும் 21 வயதான அமெரிக்கா வீரங்கனை சோபியா கெனினும் தரவரிசையில் 32 ஆவது இடத்தில் இருக்கும் 26 வயதான ஜேர்மனி வீராங்கனை கர்பீன் முகுருசாவும் ஒருவரை ஒருவர் எதிர்த்தாடினர்.
சுமார் 2 மணித்தியாலங்களும் 03 நிமிடங்களும் நீடித்த இந்த ஆட்டத்தின் இறுதியில் 4-6 6-2 6-2 என்ற செட் கணக்கில் முகுருசாவை வீழ்த்தி கெனின் முதலாவது கிரேண்ட் ஸ்லாம் பட்டத்தை தனதாக்கினார்.
இதன் மூலம் 21 வயதான கெனின், அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் ரஷ்ய நாட்டு வீராங்கனை மரியா ஷரபோவுக்குப் பின்னர் இளம் வயதில் சம்பியன் பட்டம் பெற்றவர் என்ற பெருமையை பெற்றார்.
இதேவேளை நாளை இடம்பெறும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீமும், சேர்பிய வீரர் நோவக் ஜோகவிச்சும் பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.