அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்ரேலியாவை மிரட்டும் புயல்!

அவுஸ்ரேலியாவை புயல் நெருங்கி வந்து கொண்டிருப்பதால், அந்நாட்டின் வடக்கு பகுதியான குவின்ஸ்லாந்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவுஸ்ரேலியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள குவின்ஸ்லாந்துக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 140 மைல் வேகத்தில் காற்று வீசும் என்றும் பலத்த காற்றுடன் மழையும் பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் உட்பட குவின்ஸ்லாந்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். வெளியேறுவதற்காக ரெயில் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்கிழமை) புயல் வீசும் என்று எச்சரிக்கை ...

Read More »

அவுஸ்ரேலிய அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்தும் வேலைகள் ஆரம்பம்!

அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளின் அங்க அடையாளங்கள் மற்றும் கைரேகை அடையாளங்களைப் பதியத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேயின் நழைவிசைவு விண்ணப்பம் பரிசீலனையில்!

சிறிலங்கா இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேயின் நழைவிசைவு விண்ணப்பம் தொடர்பாக இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று சிறிலங்காவுக்கான அவுஸ்ரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது. போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேயின் நழைவிசைவு விண்ணப்பத்தை அவுஸ்ரேலியா நிராகரித்திருப்பதாக நேற்று செய்திகள் வெளியாகியிருந்தன. இதுதொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று அவுஸ்ரேலிய தூதரகத்திடம் எழுப்பிய கேள்விக்கு, ஆதாரமற்ற போர்க்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் எந்தவொரு சிறிலங்கா இராணுவ அதிகாரிக்கும் நழைவிசைவு மறுக்கப்படவில்லை என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது. மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேயின் நுழைவிசைவு விண்ணப்பம் இன்னமும் ...

Read More »

கீத் நொயார் தம்மை தாக்கியவர்களின் அடையாள அணி வகுப்பில் பங்கேற்க விரும்பவில்லை

அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து வரும் ஊடகவியலாளர் கீத் நொயார் தம்மை தாக்கியவர்களின் அடையாள அணி வகுப்பில் பங்கேற்க விரும்பவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2008ம் ஆண்டு கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் தற்போது வழக்கு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சம்பவம் தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதும் கீத் நொயார், அடையாள அணி வகுப்பில் பங்கேற்க ஆர்வம் ...

Read More »

அவுஸ்ரேலிய தேவாலயத்தில் இந்திய பாதிரியாருக்கு கத்திக்குத்து

அவுஸ்ரேலியாவில் கிறிஸ்தவ தேவாலயத்தில் இனவெறி காரணமாக இந்திய பாதிரியார் கத்தியால் குத்தப்பட்டார். அவுஸ்ரேலியாவில் மெல்போர்ன் கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியாராக இருப்பவர் டோமி களத்தூர் மாத்யூ (48). கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள ஆனக்காம் பொயில் கரிம்பு பகுதியைச் சேர்ந்தவர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அங்குள்ள தேவாலயத்தில் திருப்பலி பூஜையும் பிரார்த்தனையும் நடந்தது. அதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பாதிரியார் டோமி களத்தூர் மாத்யூ திருப்பலி பூஜை நடத்தினார். அப்போது சுமார் 72 வயது ஆசாமி எழுந்தார். பாதிரியார் இந்தியாவை சேர்ந்தவர். அவர் ஒரு ...

Read More »

மாற்று தந்திரத்தை கையாண்ட அவுஸ்ரேலியா!

ராஞ்சி டெஸ்டில் நங்கூரம் பாய்ச்சி நின்ற மாதிரி நிலையாக நின்ற புஜாராவை வீழ்த்த முடியாததால் மாற்றுத் தந்திரத்தை கையாண்டது அவுஸ்ரேலியா. இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி ராஞ்சியில் இன்று(18) தொடங்கியது. இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுக்களை இழந்து 240 ரன்கள் சேர்த்துள்ளது. ஒரு நாள் முழுவதும் சுமார் 90 ஓவரில் 240 ரன்கள் என்பது மிகவும் குறைவுதான். ஒரு ஓவருக்கு சராசரியாக 3 ரன்கள் கூட வரவில்லை. இந்த ஆடுகளத்தில் ரன்அடிக்க மிகவும் கடினமாக இருந்தது ...

Read More »

ஒளிரும் நீல நிறத்தில் மாறிய அவுஸ்திரேலிய கடல்கள்!

அவுஸ்திரேலியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கடற்கரைகளில் நிரந்தரமாக உருவாகியிருக்கும் ஒற்றை செல் பாசிகளால், கடல் நீல நிறத்தில் காட்சியளிக்கிறது. அவுஸ்திரேலியாவில் உள்ள தீவு மாநிலமான Tasmaniaவின் வடமேற்கு பகுதிகளில் உள்ள கடல்களை புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞர் சாட்வின் அதை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். கடலின் நிறம் கண்களை கவரும் வகையில் பிரகாசமான நீல வண்ணமயமாக மாறியுள்ளது. கடல் நிறத்தின் மாற்றத்துக்கான காரணம் குறித்து தாவரவியல் துறை பேராசிரியர் Gustaaf Hallegraeff கூறுகையில், கடற்கரைப் பகுதியில் உருவாகியுள்ள ஒரு பெரும் கடற்பாசிப் பெருக்கம் காரணமாக ...

Read More »

பெருவெள்ளத்தில் சிக்கி 14 மணிநேரம் உயிருக்கு போராடிய நபர்

அவுஸ்திரேலியாவில் நபர் ஒருவர் வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடி வந்த நிலையில், 14 மணி நேரத்திற்கு பின்னர் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டு படையினர் காப்பாற்றியுள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது. குயின்ஸ்லாந்து, காண்டமின்னில் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. லொறி ஓட்டுநர் ஒருவர் Leichhardt நெடுஞ்சாலை வழியாக பயணித்துக்கொண்டிருந்த போது, பெருவெள்ளத்தில் சிக்கியுள்ளார். லொறி வெள்ளத்தில் மூழ்க, ஓட்டுநர் லொறியின் மேல் ஏறியுள்ளார். சுற்றியும் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிலையில் தப்பிக்க வழியில்லாமல் இரவு முழுவதும் ஓட்டுநர் சிக்கியுள்ளார். இந்நிலையில், தகவலறிந்த மீட்புக்குழுவினர், 14 மணிநேரத்திற்கு பிறது ...

Read More »

தடுப்பூசி போடாத குழந்தைகளை ஆரம்ப பாடசாலைகளில் சேர்க்க தடை

அவுஸ்திரேலியா நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத குழந்தைகளை மருத்துவமனை மற்றும் ஆரம்ப பள்ளிகளில் சேர்க்க தடை விதிப்பது தொடர்பாக அந்நாட்டு அரசு தீவிர ஆலோசனையை மேற்கொண்டு வருகிறது. அவுஸ்திரேலியா நாட்டில் உள்ள ஒரு சில மாகாண அரசுகள் தடுப்பூசி போடாத குழந்தைகளை மருத்துவமனை மற்றும் நர்சரி பள்ளிகளில் சேர்க்க தடை விதித்துள்ளது. ஆனால், இதனை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த அந்நாட்டு பிரதமரான மால்கம் டர்ன்புல் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் 2000 பெற்றோர்களிடம் நடத்திய ஆய்வில் சுமார் 5 சதவிகித குழந்தைகளுக்கு முழுவதுமாக தடுப்பூசி ...

Read More »

கிரிக்கெட் போட்டியில் அடித்துக்கொண்ட வீரர்கள்- அவுஸ்ரேலியா

அவுஸ்திரேலியாவில், உள்ளூர் கிரிக்கெட் போட்டியொன்றின்போது, தன்னை ஆட்டமிழக்கச் செய்த பந்துவீச்சாளரின் செய்கையால் கோபமடைந்த துடுப்பாட்ட வீரர் அவரை மோதித் தள்ளிய சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களைப் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ‘யக்கன்டன்டா’ மற்றும் ‘எஸ்க்டேல்’ ஆகிய இரண்டு விளையாட்டுக் கழகங்களுக்கிடையே சில தினங்களுக்கு முன் கிரிக்கெட் போட்டியொன்று நடைபெற்றது. இதன்போது, யக்கன்டன்டா கழகப் பந்துவீச்சாளரின் பந்துவீச்சில் எதிரணி துடுப்பாட்ட வீரர் ஆட்டமிழந்தார். இதையடுத்து பந்துவீச்சாளர் தனது வெற்றியைக் கொண்டாடும் முகமாக, ஆக்ரோஷமாகக் கத்தியபடியே துடுப்பாட்ட வீரருக்கு அருகே சென்றார். இதனால் கோபம் கொண்ட துடுப்பாட்ட வீரர் பந்துவீச்சாளரைத் ...

Read More »