அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து வரும் ஊடகவியலாளர் கீத் நொயார் தம்மை தாக்கியவர்களின் அடையாள அணி வகுப்பில் பங்கேற்க விரும்பவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2008ம் ஆண்டு கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் தற்போது வழக்கு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சம்பவம் தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதும் கீத் நொயார், அடையாள அணி வகுப்பில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Eelamurasu Australia Online News Portal