பெருவெள்ளத்தில் சிக்கி 14 மணிநேரம் உயிருக்கு போராடிய நபர்

அவுஸ்திரேலியாவில் நபர் ஒருவர் வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடி வந்த நிலையில், 14 மணி நேரத்திற்கு பின்னர் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டு படையினர் காப்பாற்றியுள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.

குயின்ஸ்லாந்து, காண்டமின்னில் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.

லொறி ஓட்டுநர் ஒருவர் Leichhardt நெடுஞ்சாலை வழியாக பயணித்துக்கொண்டிருந்த போது, பெருவெள்ளத்தில் சிக்கியுள்ளார். லொறி வெள்ளத்தில் மூழ்க, ஓட்டுநர் லொறியின் மேல் ஏறியுள்ளார்.

சுற்றியும் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிலையில் தப்பிக்க வழியில்லாமல் இரவு முழுவதும் ஓட்டுநர் சிக்கியுள்ளார். இந்நிலையில், தகவலறிந்த மீட்புக்குழுவினர், 14 மணிநேரத்திற்கு பிறது சம்பவயிடத்திறகு ஹெலிகாப்டருடன் சென்று ஓட்டுநரை மீட்டுள்ளனர்.

லொறி ஓட்டுநர் கொரியா நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. காப்பாற்றப்பட்ட நிலையில் நீர்ப்பொக்கு, காயங்களால் பாதிக்கப்பட்டுள்ள லொறி ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.