ஒளிரும் நீல நிறத்தில் மாறிய அவுஸ்திரேலிய கடல்கள்!

அவுஸ்திரேலியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கடற்கரைகளில் நிரந்தரமாக உருவாகியிருக்கும் ஒற்றை செல் பாசிகளால், கடல் நீல நிறத்தில் காட்சியளிக்கிறது.

அவுஸ்திரேலியாவில் உள்ள தீவு மாநிலமான Tasmaniaவின் வடமேற்கு பகுதிகளில் உள்ள கடல்களை புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞர் சாட்வின் அதை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். கடலின் நிறம் கண்களை கவரும் வகையில் பிரகாசமான நீல வண்ணமயமாக மாறியுள்ளது.

கடல் நிறத்தின் மாற்றத்துக்கான காரணம் குறித்து தாவரவியல் துறை பேராசிரியர் Gustaaf Hallegraeff கூறுகையில், கடற்கரைப் பகுதியில் உருவாகியுள்ள ஒரு பெரும் கடற்பாசிப் பெருக்கம் காரணமாக இது நிகழ்ந்துள்ளது. இந்த கடற்பாசி பார்ப்பதற்கு பளபளப்பாக இருப்பதால், கடலின் நிறம் பிரகாசமாக தெரிகிறது.

இவ்வகையான பாசிகள் விஷதன்மை கொண்டது கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், கடந்த 2000ஆம் ஆண்டில் இது தெற்கு திசையை நோக்கி உருவாகியது எனவும் தற்போது நிரந்தரமாக Tasmaniaவில் உருவாகிவிட்டதாகவும் Gustaaf தெரிவித்துள்ளார்.

இவ்வகை பாசிகள் உணவு சங்கிலி முறையை சிதைப்பதாக அமையலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.