அவுஸ்ரேலியாவை புயல் நெருங்கி வந்து கொண்டிருப்பதால், அந்நாட்டின் வடக்கு பகுதியான குவின்ஸ்லாந்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அவுஸ்ரேலியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள குவின்ஸ்லாந்துக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 140 மைல் வேகத்தில் காற்று வீசும் என்றும் பலத்த காற்றுடன் மழையும் பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் உட்பட குவின்ஸ்லாந்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். வெளியேறுவதற்காக ரெயில் போக்குவரத்து
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று (செவ்வாய்கிழமை) புயல் வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வானம் கரு மேகங்கள் சூழ்ந்து காணப்படுகிறது.

முன்பு இல்லாத அளவில் மக்கள் அதிக அளவில் வெளியேற்றப்படுவது தற்போது தான் நிகழ்வதாக குவின்ஸ்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 3500 பேர் ஹோம் ஹில் பகுதியில் பிரோசர்பின் நகருக்கும், கடற்கரை பகுதியான போவெனில் இருந்து, பலஸ்ஜுக்குக்கு 2 ஆயிரம் மக்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal