அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்ரேலியாவில் உல்லாச விடுதி ஒன்றில் இளம்பெண் ஒருவர் பலி!

அவுஸ்ரேலியாவில் உல்லாச விடுதி ஒன்றில் பிரித்தானியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டது தொடர்பாக காவல் துறையினர்  விசாரணை தொடங்கியுள்ளனர். பிரித்தானியவை சேர்ந்த Stacey Tierney என்ற 29 வயது இளம்பெண் ஒருவர் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள strip clubல் நடன அழகியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 19ம் திகதி காலை Stacey அந்த உல்லாச விடுதியில் பிணமாக கிடந்துள்ளார். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை Staceyன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ...

Read More »

அவுஸ்ரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 538 ரன் குவிப்பு

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்ரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 538 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் முதல் 2 டெஸ்டிலும் வென்று அவுஸ்ரேலியா தொடரை கைப்பற்றியது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் 39 ரன் வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 18 ரன் வித்தியாசத்திலும் அந்த அணி வெற்றி பெற்று இருந்தது. ...

Read More »

அவுஸ்திரேலியாவில் ஆப்கான் அகதி ஒருவர் பெண்ணை கத்தியால் குத்தினார்!

அவுஸ்திரேலியாவில் ஆப்கான் அகதி ஒருவர் கிறிஸ்துவ பெண்ணை மார்பில் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏறப்படுத்தியுள்ளது. Voecklamarkt, Timelkam உள்ள அகதிகள் விடுதியிலே இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. குற்றச்செயல்லில் ஈடுபட்ட 22 வயதான ஆப்கான் அகதியை பொலிசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட 50 வயதான பெண்ணை கிறிஸ்துவ குடியிருப்பாளர்கள் அகதி விடுதியில் பைபிள் படிக்க அழைத்துள்ளனர். சமையலறையில் பெண் பைபிள் வாசித்துக்கொண்டிருந்தை அறிந்த அகதி, சமையலறையில் நுழைந்து கத்தியால் பெண்ணின் மார்பு பகுதியில் குத்தியுள்ளார். பெண் அணிதிருந்த குளிர்கால கோட் தடித்து இருந்ததால் ...

Read More »

பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபருக்கு 8 ஆண்டுகள் சிறை!

அவுஸ்ரேலியா நாட்டில் மதுபோதையில் இருந்த இளம்பெண்ணை கொடூரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய  நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. அவுஸ்ரேலியாவில் உள்ள சிட்னி நகரில் தான் இந்த கொடூரச் செயல் நிகழ்ந்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் Hyde Park என்ற இடத்தில் உள்ள மதுபான விடுதியில் இருந்து ஒரு இளம்பெண் மது அருந்துவிட்டு தள்ளாடியவாறு நடந்துச் சென்றுள்ளார். இப்பெண்ணை 52 வயதான Joseph Stephen Rosenburg என்ற பார்த்து  பெண்ணை தொடர்ந்து சென்றுள்ளார். சிறிது தூரத்தில் உள்ள பூங்கா ...

Read More »

வார்னர் அதிரடி சதம் !

பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அவுஸ்ரேலியா அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் சதம் அடித்தார். பாகிஸ்தான் கிரிக்கெட்விஅவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்டில் விளையாடுகிறது. இதில் முதல் 2 டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது. அவுஸ்ரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (3) சிட்னியில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், மெட்ரென்சவ் களம் இறங்கினார்கள். டேவிட் வார்னர் ...

Read More »

பவுச்சர்ட் அதிர்ச்சி தோல்வி!

அவுஸ்ரேலியாவில் நடந்துவரும் பிரிஸ்பேன் டென்னிஸ் போட்டியில் கனடா வீராங்கனை பவுச்சர்ட் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்தார். பிரிஸ்பேன் டென்னிஸ் போட்டி அவுஸ்ரேலியாவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கனடாவின் பவுச்சர்ட் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவர் அமெரிக்காவின் ஷெல்பை ரோஜர்சிடம் 2-6, 6-2, 1-6 என்ற செட் கணக்கில் தோற்றார். பிரான்ஸ் வீராங்கனை சோர்ட் 3-6, 6-4, 7-6 என்ற செட் கணக்கில் ரஷியாவின் வெஸ்னினாவை வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் பிலிஸ்கோவா (செக்குடியரசு), மிசகாய் டோய் (ஜப்பான்) ...

Read More »

டுபாயில் பயிற்சி எடுக்க அவுஸ்ரேலியா திட்டம்!

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இப்போட்டிக்காக டுபாயில் பயிற்சி எடுக்க அவுஸ்ரேலியா திட்டமிட்டு உள்ளது. அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் பிப்ரவரி 23-ந்திகதி புனேவில் தொடங்கியது. சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் டெஸ்ட் தொடரில் படுதோல்வியை சந்தித்தன. இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினார்கள். அவுஸ்ரேலிய அணி இந்திய மண்ணில் 2004-ம் ஆண்டுக்கு ...

Read More »

அவுஸ்ரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக பாண்டிங் நியமனம்

இலங்கை அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான அவுஸ்ரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக பாண்டிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இலங்கை அணி பிப்ரவரி மாதம் அவுஸ்ரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. முதல் போட்டி 17-ந்திகதியும், 2-வது போட்டி 19-ந்திகதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 22-ந்திகதியும் நடக்கிறது. 23-ந்திகதி அவுஸ்ரேலியா இந்தியாவில் டெஸ்ட் போட்டியில் மோதுகிறது. 22-ந்திகதி போட்டியை முடித்துக் கொண்டு 23-ந்திகதி இந்தியாவிற்கு அவுஸ்ரேலிய அணி வருவதற்கு வாய்ப்பில்லை. இதனால் டி20 அணிக்கு முற்றிலும் ...

Read More »

அவுஸ்ரேலியா: தாயின் கார் சக்கரத்தில் சிக்கி 7 மாத குழந்தை பலி!

அவுஸ்ரேலியாவில் ஒரு பெண் ரிவர்ஸ் எடுத்த கார் சக்கரத்தில் சிக்கி 7 மாத குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்ரேலியா நாட்டிலுள்ள குவீன்ஸ்லாந்து அருகாமையில் வுட்ரிட்ஜ் என்ற பகுதியில் தனது 7 மாத குழந்தை தள்ளுவண்டியில் இருப்பதை கவனிக்காத அந்தப் பெண், காரை திருப்புவதற்காக பின்பக்கமாக செலுத்தியுள்ளார். வேகமாக பின்னால் வந்த காரின் சக்கரத்தில் தள்ளுவண்டியுடன் சிக்கிய அந்தக் குழந்தையை மீட்டு, ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோதும் சிகிச்சை பலனின்றி அது உயிரிழந்ததாக காவல் துறையினர்  தெரிவித்துள்ளனர். கிறிஸ்துமஸ் அன்றிரவு நிகழ்ந்த இந்த ...

Read More »

அவுஸ்ரேலியா: இசை நிகழ்ச்சியில் 80 பேர் காயம்!

அவுஸ்ரேலியாவில் புத்தாண்டு விழாவை கொண்டாடிய இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி 80-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அவுஸ்ரேலியா நாட்டின் தென்கிழக்கு பகுதியிலுள்ள விக்டோரியா மாநிலத்தில் உள்ள லோர்னே நகரின் கிராண்ட் கலையரங்கத்தில் புத்தாண்டையொட்டி, இசை மற்றும் கலைவிழா நிகழ்ச்சிகள் (உள்ளூர் நேரப்படி) நேற்றிரவு நடைபெற்றன. இவ்விழாவில் பங்கேற்க ஆயிரக்கணக்கான மக்கள் பெரும்திரளாக கூடியிருந்தனர். அவுஸ்ரேலியாவின் பிரபல இசைக்குழுவினரின் நிகழ்ச்சி முடிந்தவுடன், அருகாமையில் உள்ள மற்றொரு மேடையில் பிரிட்டன் நாட்டின் மிகப்பிரபலமான ‘லண்டன் கிரம்மர்’ குழுவினரின் இசை நிகழ்ச்சி ஆரம்பமானது. அப்போது ஆர்வமிகுதியால் கூட்டத்தில் இருந்த ...

Read More »