டுபாயில் பயிற்சி எடுக்க அவுஸ்ரேலியா திட்டம்!

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இப்போட்டிக்காக டுபாயில் பயிற்சி எடுக்க அவுஸ்ரேலியா திட்டமிட்டு உள்ளது.

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் பிப்ரவரி 23-ந்திகதி புனேவில் தொடங்கியது. சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் டெஸ்ட் தொடரில் படுதோல்வியை சந்தித்தன. இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினார்கள்.

அவுஸ்ரேலிய அணி இந்திய மண்ணில் 2004-ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் தொடரை வென்றதில்லை. 2013-ம் ஆண்டு 4 டெஸ்ட் போட்டியில் தோற்றது.

கடந்த ஆண்டு இலங்கை மண்ணில் விளையாடிய அவுஸ்ரேலியா மூன்று டெஸ்டிலும் தோற்றது. இதுபோன்ற நிலைமை இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது.

இந்திய மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால் அதை சமாளிக்க அவுஸ்ரேலியா வியூகம் வகுத்து வருகிறது. அதன்படி இந்திய சுற்றுப்பயணத்துக்கு தயாராக துபாயில் பயிற்சி எடுக்கஅவுஸ்ரேலியா திட்டமிட்டு உள்ளது.

ஏனென்றால் துபாயில் உள்ள மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். எனவே அங்கு பயிற்சி எடுத்தால் பலம் வாய்ந்த இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடிம் என்று கருதுகிறது.