அவுஸ்ரேலியாவில் ஒரு பெண் ரிவர்ஸ் எடுத்த கார் சக்கரத்தில் சிக்கி 7 மாத குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்ரேலியா நாட்டிலுள்ள குவீன்ஸ்லாந்து அருகாமையில் வுட்ரிட்ஜ் என்ற பகுதியில் தனது 7 மாத குழந்தை தள்ளுவண்டியில் இருப்பதை கவனிக்காத அந்தப் பெண், காரை திருப்புவதற்காக பின்பக்கமாக செலுத்தியுள்ளார்.
வேகமாக பின்னால் வந்த காரின் சக்கரத்தில் தள்ளுவண்டியுடன் சிக்கிய அந்தக் குழந்தையை மீட்டு, ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோதும் சிகிச்சை பலனின்றி அது உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் அன்றிரவு நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக ‘அஜாக்கிரத்தை மரணம்’ என்ற குற்றப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Eelamurasu Australia Online News Portal