அவுஸ்ரேலியாவில் நடந்துவரும் பிரிஸ்பேன் டென்னிஸ் போட்டியில் கனடா வீராங்கனை பவுச்சர்ட் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பிரிஸ்பேன் டென்னிஸ் போட்டி அவுஸ்ரேலியாவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கனடாவின் பவுச்சர்ட் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
அவர் அமெரிக்காவின் ஷெல்பை ரோஜர்சிடம் 2-6, 6-2, 1-6 என்ற செட் கணக்கில் தோற்றார். பிரான்ஸ் வீராங்கனை சோர்ட் 3-6, 6-4, 7-6 என்ற செட் கணக்கில் ரஷியாவின் வெஸ்னினாவை வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் பிலிஸ்கோவா (செக்குடியரசு), மிசகாய் டோய் (ஜப்பான்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
Eelamurasu Australia Online News Portal