அவுஸ்ரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 538 ரன் குவிப்பு

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்ரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 538 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் முதல் 2 டெஸ்டிலும் வென்று அவுஸ்ரேலியா தொடரை கைப்பற்றியது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் 39 ரன் வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 18 ரன் வித்தியாசத்திலும் அந்த அணி வெற்றி பெற்று இருந்தது.

அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகள் மேலும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 365 ரன் குவித்து இருந்தது.

தொடக்க வீரர்கள் வார்னர், மேட்ரன்ஷா ஆகியோர் சதம் அடித்து இருந்தனர். வார்னர் 113 ரன்னில் ஆடடம் இழந்தார். ரென்ஷா 167 ரன்னிலும், பீட்டர் ஹேன்ட்ஸ்ம் 40 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலியா தொடர்ந்து விளையாடியது. அபாரமாக விளையாடி வந்த ரென்ஷா 184 ரன்னில் ஆட்டம் இழந்தார். 293 பந்துகளில் 20 பவுண்டரியுடன் அவர் இந்த ரன்னை எடுத்தார்.

பீட்டர்ஹேண்ட்சும் 3-வது வீரராக இந்த டெஸ்டில் சதம் அடித்தார். அவர் 110 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 4-வது டெஸ்டில் விளையாடிய அவருக்கு இது 2-வது சதமாகும். வகாப்ரியாஸ் 3 விக்கெட்டும், இம்ரன்கான், அசார்அலி தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 538 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.  பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை விளையாடியது. 6 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 2 விக்கெட்டை இழந்தது. ஹாசல்வுட் பந்தில் சர்ஜில்கான் (4 ரன்), பாபர் ஆசம் (0) ஆட்டம் இழந்தனர்.