அவுஸ்ரேலியா நாட்டில் மதுபோதையில் இருந்த இளம்பெண்ணை கொடூரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
அவுஸ்ரேலியாவில் உள்ள சிட்னி நகரில் தான் இந்த கொடூரச் செயல் நிகழ்ந்துள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் Hyde Park என்ற இடத்தில் உள்ள மதுபான விடுதியில் இருந்து ஒரு இளம்பெண் மது அருந்துவிட்டு தள்ளாடியவாறு நடந்துச் சென்றுள்ளார்.
இப்பெண்ணை 52 வயதான Joseph Stephen Rosenburg என்ற பார்த்து பெண்ணை தொடர்ந்து சென்றுள்ளார்.
சிறிது தூரத்தில் உள்ள பூங்கா ஒன்றிற்கு சென்ற அப்பெண் அங்குள்ள மரத்திற்கு கீழ் பாதி சுயநினைவின்றி அமர்ந்துள்ளார்.
சூழலை உணர்ந்துக்கொண்ட நபர் இளம்பெண்ணை மிரட்டி அதே இடத்தில்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார்.
மேலும், விருப்பத்திற்கு இணங்காவிட்டால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டி இயற்கைக்கு மாறான முறையில் அப்பெண்ணை 3 முறை கபாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார்.
எனினும், நபரிடம் இருந்து தப்பிக்க கடுமையாக போராடிய அப்பெண் அவருக்கு தெரியாமல் நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். பின்னர் அங்கிருந்து உடனடியாக தப்பியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த நண்பர்கள் இளம்பெண்ணை அழைத்துச்சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். இவ்விவகாரத்தில் நபரின் டி.என்.ஏ மூலம் அவர் கண்டுபிடிக்கப்பட்டார்.
ஆனால், நீதிமன்றத்தில் இளம்பெண் தான் தன் மீது மோகம் கொண்டு உடலுறவுக்கு அழைத்ததாக கூறினார்.
நபரின் வாக்குமூலத்தை நிராகரித்த நீதிபதி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பளித்துள்ளார்.