பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அவுஸ்ரேலியா அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் சதம் அடித்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட்விஅவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்டில் விளையாடுகிறது.
இதில் முதல் 2 டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது.
அவுஸ்ரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (3) சிட்னியில் தொடங்கியது.
டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், மெட்ரென்சவ் களம் இறங்கினார்கள்.
டேவிட் வார்னர் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். 42 பந்தில் அரை சதம் அடித்த அவர் 78 பந்தில் சதம் அடித்து அசத்தினார். இதில் 17 பவுண்டரி அடங்கும்.
60-வது டெஸ்டில் அவருக்கு இது 18-வது சதமாகும். மதிய உணவு இடைவேளைக்கு முன்பே அவர் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.
டேவிட்வார்னர் 113 ரன்னில் (95 பந்து) அவுட் ஆனார். அடுத்து களம் வந்த குவாஜா 13 ரன்னில் வெளியேறினார். ரென்சவ்-கேப்டன் சுமித் ஜோடி சிறப்பாக விளையாடியது. ரென்சவ் சதத்தை நோக்கி சென்றார். ஆஸ்திரேலியா 59 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 243 ரன் எடுத்து இருந்தது.
மதிய உணவு இடைவேளைக்கு முன்பு சதம் அடித்த 2-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை வார்னர் பெற்றார்.
இதற்கு முன்பு கிரிக்கெட் சகாப்தம் டான் பிராட்மேன் 1930-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக லீட்ஸ் மைதானத்தில் உணவு இடைவேளைக்கு முன்பு சதம் அடித்து இருந்தார்.