அவுஸ்திரேலியமுரசு

பயங்கரவாதத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க அவுஸ்ரேலியா தேசிய திட்டம்!

அவுஸ்ரேலியாவில் சொத்து மேம்பட்டாளர்கள் மேற்கொள்ளும் திட்டங்களில் பயங்கரவாதத் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் அம்சங்களைச் சேர்ப்பதற்கு  பிரதமர் மெல்கோம் டர்ன்புல் அழைப்பு விடுத்துள்ளார். வாகன, ஆயுத தாக்குதல்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க அது உதவும் என அவர் தெரிவித்தார். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு வழங்கும் புதிய தேசிய அளவிலான திட்டத்தைப் பிரதமர் டர்ன்புல் அறிமுகப்படுத்தினார். அண்மையில் உலகின் பல இடங்களில் நடந்துவரும் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து அந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Read More »

அவுஸ்ரேலியப் பிரதமரின் அதிரடித் திட்டம்!

அவுஸ்ரேலியாவின் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியில் பொதுமக்களும் ஈடுபடும் வகையில் national security strategy – நாட்டின் பாதுகாப்புசெயல் திட்டமொன்றை பிரதமர் Malcolm Turnbull இன்று அறிமுகம் செய்தார். மெல்போர்ன் மற்றும் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா ஆகிய நகரங்களில் சமீபத்தில் வாகனத்தை பயன்படுத்தி பொதுமக்களின்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுபோன்ற தாக்குதல்களிலிருந்து பொதுமக்கள் தப்பிக்கும் வகையில், சாலை, கடை, சந்தை என்று பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வாகனங்கள் நுழைய இயலாதவாறு சுவர்கள், தடைகள் ஏற்படுத்தும் வழிமுறைகளை இந்த புதிய செயல் திட்டம் விளக்குமென அவுஸ்ரேலிய ...

Read More »

அவுஸ்ரேலிய தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழன்!

அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சிட்னி நகர சபைக்கான தேர்தலில் தமிழர் தாயகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஈழத் தமிழ் அகதியான சுஜன் செல்வன் போட்டியிடுகின்றார். அரசியல் தஞ்சம் கோரும் ஈழத் தமிழர்களுக்கு அவுஸ்திரேலியாவின் தற்போதைய அரசியல் சூழ்நிலை அவ்வளவு சாதகமானதாக இல்லையென கூறும் முன்னாள் அகதியும், தற்போதைய அவுஸ்திரேலிய பிரஜையுமான சுஜன் செல்வன் எனினும், அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரும் ஈழத் தமிழர்கள் அந்நாட்டு சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு நேர்காணலின்போது சரியான தகவல்களை வழங்குவதன் ஊடாக தஞ்சக்கோரிக்கை அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள முடியுமென நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ...

Read More »

பயங்கரவாத தாக்குதலில் மூன்று முறை உயிர் தப்பிய பெண்!

இந்த வருடம் இடம்பெற்ற மூன்று பயங்கரவாத தாக்குதல்களின் போது, சம்பவ இடங்களில் இருந்து உயிர் தப்பிய அவுஸ்திரேலிய பெண் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. மூன்று நாடுகளின் மூன்று இடங்களில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் போது குறித்த பெண் சம்பவ இடத்தில் இருந்துள்ளார். அவுஸ்திரேலியா மெல்போர்ன் நகரத்தை சேர்ந்த 26 வயதுடைய Julia Monaco என்ற பெண்னே இவ்வாறு உயிர் தப்பியுள்ளார். பார்சிலோனாவில் நேற்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் போதும் Julia Monaco ஆபத்தின்றி உயிர் தப்பியுள்ளார். பார்சிலோனா ரம்பிலாஸ் பகுதியில் உள்ள கடை ...

Read More »

அவுஸ்ரேலிய நாடாளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., பர்தா அணிந்து வந்ததால் பரபரப்பு

அவுஸ்ரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., பவுலின் ஹன்சன் பர்தா அணிந்து அணிந்து வந்தது பிற உறுப்பினர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அவுஸ்ரேலியாவில் வலதுசாரி கட்சியான ‘ஒன் நேஷன்’ கட்சியின் தலைவராக பவுலின் ஹன்சன் என்ற பெண் இருந்து வருகிறார். இவர், அந்த நாட்டு நாடாளுமன்ற செனட் சபையின் உறுப்பினரும் ஆவார். இந்த கட்சி அங்கு முஸ்லிம் பெண்கள் பர்தா என்று அழைக்கப்படுகிற முகத்திரை அணிவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறது. இந்த நிலையில், பவுலின் ஹன்சன் பாராளுமன்ற ...

Read More »

புதிய $10 நோட்டு பாவனைக்கு வருகிறது!

அவுஸ்ரேலியாவில் புதிய 10 டொலர் நாணயத்தாள்/நோட்டு எதிர்வரும் செப்டம்பர் 20ம் திகதி முதல் புழக்கத்திற்கு வரும் என ஆளுநர் Philip Lowe தெரிவித்துள்ளார். கடந்த வருடம் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் 5 டொலர் நோட்டுக்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது 10 டொலர் நோட்டுக்கள் வெளியிடப்படுகின்றன. பார்வைக்குறைபாடு உள்ளவர்களும் இலகுவாக அடையாளம் காணும் வகையிலும், போலி நோட்டுக்களை அச்சடிக்க முடியாதவாறு கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடனும் இப்புதிய 10 டொலர் நோட்டு வெளியிடப்படுகின்றது. எந்த சிக்கல்களுமின்றி புதிய நோட்டுக்கள் மக்கள் பாவனைக்கு வரும்வகையில், பணம் பெறும் இயந்திரங்களில் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் புகைப்பிடிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு!

அவுஸ்ரேலியாவில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாதவகையில் உயர்வடைந்துள்ளதாக புதிய அறிக்கை தெரிவிக்கின்றது. தற்போது நாடு முழுவதும் வழக்கமாக புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 2.4 மில்லியனாக உயர்வடைந்துள்ளது. இது அமெரிக்காவின் தேசியளவில் புகைப்பிடிப்போர் வீதத்தைவிட அதிகமாகும். அவுஸ்ரேலியாவில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக சிகரெட் மீது அதிகளவு வரி, plain packaging மற்றும் புகைப்பிடித்தலுக்கெதிரான பிரச்சாரங்கள் என, பல வழிகளிலும் அரசு முயற்சித்துவரும் நிலையில், புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2010 க்கும் 2013 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தி 17 ஆயிரத்தால் குறைவடைந்த போதும், இதன் பின்னரான ...

Read More »

மெல்பேர்ன் 7வது ஆண்டாக தொடர்ந்தும் முதலிடம்!

உலகில் வாழ்வதற்கு மிகவும் உகந்த நகரங்களில் மெல்பேர்ன் ஏழாவது ஆண்டாக தொடர்ந்தும் முதலிடத்தில் இருக்கிறது. 100 க்கு 97.5 புள்ளிகள் மெல்பேர்னுக்கு கிடைத்துள்ளன. The Economist Intelligence Unit (EIU) உலகிலுள்ள 140 பெரிய நகரங்களின் மருத்துவம், கல்வி, கலாச்சாரம், சுற்றுச்சூழல், உட்கட்டமைப்பு உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக வைத்து தரப்படுத்தியதில் மெல்பேர்ன் நகரம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் ஆஸ்திரியாவின் வியன்னா நகரமும் மூன்றாவது இடத்தில் கனடாவின் வான்கூவர் நகரமும் நான்காவது இடத்தில் ரொறன்டோ நகரமும் காணப்படுகின்றன. அடிலெய்ட் ஐந்தாவது இடத்தை தக்க ...

Read More »

அவுஸ்ரேலியாவில் இந்திய சுதந்திர தின விழா!

உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்களில் இந்திய சுதந்திர தின விழா நேற்று (15) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அவுஸ்ரேலியாவின் கான்பெர்ரா, மெல்போர்ன், சிட்னி நகரங்களில் உள்ள தூதரகங்களில் சுதந்திர தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இந்திய சுதந்திர தின விழாவுக்கு அவுஸ்ரேலிய  பிரதமர் மால்கம் டர்ன்புல் வாழ்த்து செய்தி வெளியிட்டார்.

Read More »

அவுஸ்திரேலியாவின் City West Falcons அணியை இறுதிக் போட்டிக்கு தெரிவு!

ஈழத்தின் முன்னணி வலைப்பந்து வீராங்கனை சிவலிங்கம் தர்ஜினி, தற்பொழுது விளையாடி வரும் அவுஸ்திரேலியாவின் City West Falcons அணி, உலகின் முன்னணித் தொடரான விக்டோரியா வலைப்பந்து லீக்கில் பூர்வாங்க இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. தர்ஜினி அரையிறுதியில் பெற்ற அதிக புள்ளிகளே அந்த அணி கிண்ணத்தை வெல்வதற்கான வாய்ப்பை நெருக்கியுள்ளமைக்கு முக்கிய காரணியாகும். ACU Sovereigns அணிக்கு எதிராக கடந்த புதன்கிழமை (09) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தர்ஜினி புள்ளிகளை அள்ளியதால் City West Falcons அணி 59-52 என்ற புள்ளிகளால் வெற்றிபெற்றது. இந்த ஆட்டத்தில் ...

Read More »