அவுஸ்ரேலியாவில் சொத்து மேம்பட்டாளர்கள் மேற்கொள்ளும் திட்டங்களில் பயங்கரவாதத் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் அம்சங்களைச் சேர்ப்பதற்கு பிரதமர் மெல்கோம் டர்ன்புல் அழைப்பு விடுத்துள்ளார்.
வாகன, ஆயுத தாக்குதல்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க அது உதவும் என அவர் தெரிவித்தார்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு வழங்கும் புதிய தேசிய அளவிலான திட்டத்தைப் பிரதமர் டர்ன்புல் அறிமுகப்படுத்தினார்.
அண்மையில் உலகின் பல இடங்களில் நடந்துவரும் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து அந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
Eelamurasu Australia Online News Portal