அவுஸ்ரேலியாவின் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியில் பொதுமக்களும் ஈடுபடும் வகையில் national security strategy – நாட்டின் பாதுகாப்புசெயல் திட்டமொன்றை பிரதமர் Malcolm Turnbull இன்று அறிமுகம் செய்தார்.
மெல்போர்ன் மற்றும் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா ஆகிய நகரங்களில் சமீபத்தில் வாகனத்தை பயன்படுத்தி பொதுமக்களின்மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதுபோன்ற தாக்குதல்களிலிருந்து பொதுமக்கள் தப்பிக்கும் வகையில், சாலை, கடை, சந்தை என்று பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வாகனங்கள் நுழைய இயலாதவாறு சுவர்கள், தடைகள் ஏற்படுத்தும் வழிமுறைகளை இந்த புதிய செயல் திட்டம் விளக்குமென அவுஸ்ரேலிய பிரதமர் கூறியுள்ளார்.
மக்களின் பாதுகாப்பே முக்கியமானது என்ற வகையிலேயே அரசின் புதிய பாதுகாப்புசெயல் திட்டம் அறிமுகம் செய்யப்படுவதாக பிரதமர் Malcolm Turnbull தெரிவித்துள்ளார்.