நிகழ்வுமுரசு

மாவீரர் நாள் 2019 – பேர்த்

அவுஸ்திரேலியாவின் பேர்த் மாநிலத்திலும் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. புதன்கிழமை 27-11-2019 அன்று நடைபெற்ற இந்நிகழ்வில் பெருமளவானோர் கலந்துகொண்டு மாவீரர் திருவுருவப்படங்களுக்கு ஈகச்சுடரேற்றி மலர்வணக்கம் செய்தனர். தேசியக்கொடியேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் மாவீரர் நாள் நினைவுரைகள் மற்றும் மாவீரர் நினைவு சுமந்த நடன நிகழ்வு என்பனவும் நடைபெற்றுள்ளன. வழமையை விட இம்முறை அதிகளவான மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Read More »

மாவீரர் நாள் 2019 – குயின்ஸ்லாந்து

தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு, குயின்ஸ்லாந்து மாநிலத்தில் Darra என்னும் இடத்தில் 27-11-2019 புதன்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றுள்ளது. திரு அஜந்தன் நிகழ்வை தொகுத்து வழங்க, பொதுச்சுடர் ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. பொதுச்சுடரினை மருத்துவர் ராமலிங்கம் மாவீரர் குடும்பத்தை சேர்ந்த திருமதி சசி, மூத்த சமூக செயற்பாட்டாளர் திருமதி கலா சுப்ரமணியம் ஆகியோர் ஏற்றினர். அவுஸ்ரேலியக் தேசியக்கொடியினை பொறியியலாளர் குணறாஜா அவர்கள் ஏற்றிவைக்க, பூர்வீக மக்கள் கொடியினை திரு பிறேமானந்தன் ஏற்றிவைத்தார். தமிழீழ தேசிய கொடியினை தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் ...

Read More »

எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு 2019 – சிட்னி

அவுஸ்திரேலிய நகர் சிட்னியில் மாவீரர் நாள் 2019 நிகழ்வு நவம்பர் 27ஆம் திகதி புதன்கிழமை உணர்வு பூர்வமாக எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. சிட்னி நகரின் புறநகர் ஒன்றின் திறந்தவெளி அரங்கில் நிகழ்ந்த இந்நிகழ்வில் சுமார் 3,000 பேர் கலந்து கொண்டதுடன் இந்நிகழ்வில் சிட்னி வாழ் உறவுகளைச் சேர்ந்த 230 இற்கும் மேற்பட்ட மாவீரர்களின் படங்கள் மாதிரி கல்லறைகளில் வைக்கப்பட்டு அம்மாவீரர்களின் குடும்பங்ளைச் சேர்ந்தவர்கள் ஈகைச்சுடர்கள் ஏற்றி மலர்வணக்கம் செய்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வின்போது மைதானம் சிவப்பு மஞ்சள் நிறத்தில் அலங்கரிக்கப்பட்டு வாசலில் மாவீரர் நாள் வளைவு தமிழீழத்தில் ...

Read More »

தியாகி திலீபன் நினைவுநாள் செய்தியறிக்கை – சிட்னி

தமிழ்மக்களின் சுதந்திர விடிவிற்காக நீரின்றி உணவின்றி உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த தியாகி திலீபன் நினைவுநிகழ்வு, அவுஸ்திரேலியாவின் சிட்னியில் சிறப்பாக நினைவுகூரப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை 26 – 09 -2019 அன்று மாலை 7.30 மணிக்கு வென்வேத்வில் றெட் வைறோன் சமூக மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.   இளம் செயற்பாட்டாளர் சிந்துஜன் ஞானமூர்த்தி நிகழ்வை தொகுத்து வழங்க, பொதுச்சுடரை லெப்ரினன்ற் கேணல் அக்பர் அவர்ளின் மூத்தமகன் பிறைக்குமரன் ஏற்றி நிகழ்வை தொடக்கிவைத்தார். தொடர்ந்து அவுஸ்திரேலிய தேசிய கொடியை இளம் செயற்பாட்டாளர் நிலா ஏற்றிவைக்க, தமிழீழ தேசிய கொடியை ...

Read More »

தியாகி திலீபன் நினைவுநாள் செய்தியறிக்கை – மெல்பேர்ண் 2019

நீர் கூட அருந்தாது உண்ணாநோன்பிருந்து உயிர்த்தியாகம் செய்த தியாகி திலீபனின் 32 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு மெல்பேணில் கிளேன் வேவலி சென் கிறிஸ்தோபர் ஆரம்ப பாடசாலை மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 22 – 09 – 2019 அன்று சிறப்பாக, உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. இளைய செயற்பாட்டாளர் செல்வி மது பாலசண்முகன் நிகழ்வை தொகுத்து வழங்க மாலை 6 மணிக்கு நினைவு கூரல் நிகழ்வு ஆரம்பமானது. அவுஸ்திரேலிய தேசியகொடியை இளைய செயற்பாட்டாளர் யது பாலசண்முகன் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழ தேசிய கொடியை இளைய செயற்பாட்டாளர் பவித்திரன் சிவநாதன் ஏற்றிவைத்தார். தியாகதீபம் லெப்ரினன்ற் கேணல் ...

Read More »

சிட்னியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019

இலங்கைத்தீவில் நடைபெற்ற தமிழ் இனவழிப்பின் உச்சமாக முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தேறிய இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு நிகழ்வும், தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நிகழ்வும் சிட்னியில் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டுள்ளது.   கடந்த சனிக்கிழமை 18 – 05 – 2019 அன்று மாலை 6.30 மணிக்கு தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் நிதர்சன் தலைமையில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் பொதுச்சுடரினை குமார் தம்பிராசா அவர்கள் ஏற்றியதை தொடர்ந்து தேசிய கொடியேற்றல் நிகழ்வு நடைபெற்றது.   அவுஸ்திரேலிய பழங்குடிகளின் தேசியகொடியை தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்  லிங்கராசா சாந்தன் அவர்கள் ஏற்றிவைக்க, அவுஸ்திரேலிய தேசியகொடியை ...

Read More »

மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – 2019

இலங்கைத்தீவில் நீண்டகாலமாக சிங்களப் பேரினவாத சக்திகளால் இனப்படுகொலைசெய்யப்பட்ட தமிழ் மக்களையும், அந்த இனவழிப்பின் உச்சமாக 2009-ம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தேறிய மாபெரும் மனிதப் பேரவலத்தின்போதும் காவுகொள்ளப்பட்ட தமிழ் மக்களையும் நினைவுகூருகின்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நிகழ்வு, கடந்த 18-05-2019 சனிக்கிழமை மெல்பேர்ணில்; உணர்வுபூர்வமாக நடைபெற்றது.   மெல்பேர்ணில் அமையப் பெற்றுள்ள கங்கேரியன் சமூக மண்டபத்தில், மாலை 6.00 மணிக்கு செல்வி லக்சிகா தலைமையில ஆரம்பமாகிய இந்நிகழ்வில், முதல்நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் இனவழிப்பின்போது, தனது இரண்டு பிள்ளைகளை இழந்து, பின்னர் ...

Read More »

நாட்டுப்பற்றாளர் நாள் – மெல்பேர்ண் 2019

தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவுநிகழ்வு இவ்வாண்டும் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் சிறப்பாக நினைவுகூரப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை 13 – 04 – 2019 அன்று மாலை ஆறுமணிக்கு பிறிஸ்ரன் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு நாட்டுப்பற்றாளர்களையும் மாமனிதர்களையும் நினைவுகூர்ந்தனர். தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் றகுலேஸ்வரன் கிருஸ்ணபிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அவுஸ்திரேலியத் தேசியகொடியை மூத்த செயற்பாட்டாளர் மகேந்திரன் சிவப்பிரகாசம் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியகொடியை தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் தயாபரன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு குகந்தினி தயாபரன் அவர்கள் ...

Read More »

அவுஸ்திரேலியா மெல்பேணில் தமிழர் விளையாட்டு விழா 2019

வங்கக்கடலில் வீரகாவியமாகிய மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவாக ஆண்டுதோறும் நடைபெறும் தமிழர் விளையாட்டுவிழா இவ்வாண்டும் அவுஸ்திரேலியா- மெல்பேர்ணில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.கடந்த 06 -01 – 2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு வேர்வூட் கிழக்குப் பகுதியில் உள்ள பிரதான திறந்தவெளி மைதானத்தில் ஆரம்பமான இந்நிகழ்வில் அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை செயற்பாட்டாளர் செல்வன் சஞ்சீவன் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழத் தேசியக்கொடியை மாவீரர் லெப் கேணல் சதன் அவர்களின் மகன் செல்வன் பவித்திரன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து கேணல் கிட்டு உட்பட ...

Read More »

மாவீரர் நாள் 2018 – மெல்பேர்ண்

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் வீரச்சாவைத்தழுவிக்கொண்ட மாவீரர்களை நினைவுகூரும் தமிழீழ தேசிய மாவீரர்நாள் நிகழ்வுகள் 27 – 11 – 2018 செவ்வாய்க்கிழமை மெல்பேர்ண் ஸ்பிறிங்வேல் நகரமண்டபத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களான திரு பிரசாத் அவர்கள் தமிழிலும் செல்வி லக்சிகா அவர்கள் ஆங்கிலத்திலும் நிகழ்வை தலைமையேற்று தொகுத்து வழங்கினார்கள். மாலை 6.00 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில் முதன்மைச்சுடரை மாவீரர் 2ம் லெப்ரினன்ட் அருமைநாயகியின் சகோதரன் திரு ஜேசுதாசன் செல்வராஜா அவர்கள் ஏற்றிவைத்தார். அவுஸ்திரேலியக்கொடியை தமிழ்த்தேசியச்செயற்பாட்டாளர் திரு முரளீதரன் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழ தேசியக்கொடியை தமிழ் ...

Read More »