தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு, குயின்ஸ்லாந்து மாநிலத்தில் Darra என்னும் இடத்தில் 27-11-2019 புதன்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றுள்ளது.
திரு அஜந்தன் நிகழ்வை தொகுத்து வழங்க, பொதுச்சுடர் ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
பொதுச்சுடரினை மருத்துவர் ராமலிங்கம் மாவீரர் குடும்பத்தை சேர்ந்த திருமதி சசி, மூத்த சமூக செயற்பாட்டாளர் திருமதி கலா சுப்ரமணியம் ஆகியோர் ஏற்றினர்.
அவுஸ்ரேலியக் தேசியக்கொடியினை பொறியியலாளர் குணறாஜா அவர்கள் ஏற்றிவைக்க, பூர்வீக மக்கள் கொடியினை திரு பிறேமானந்தன் ஏற்றிவைத்தார். தமிழீழ தேசிய கொடியினை தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் திரு கொற்றவன் அவர்கள் ஏற்றிவைத்து மாவீரர் நினைவுரையும் ஆற்றினார்.
பிரதான சுடரினை மாவீரர் லெப்டினன் வெற்றிக்கரசனின் சகோதரன் திரு அன்ரன் தொம்மைப்பிள்ளை ஏற்றிவைத்தார்.
முதல் மாவீரர் லெப்டினன் சங்கர் அவர்களின் திருவுருவப்படத்துக்கு
கடற்புலிகளின் துணைத்தளபதி லெப்டினன் கேணல் இரும்பொறையின் சகோதரன் திரு கோணேஸ் அவர்கள் மாலை அணிவித்தார்.
மாவீரர்களின் பொதுக்கல்லறைக்கு திரு. ரவி அவர்கள் மாலை அணிவித்து மலர் வணக்கத்தை தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து அரங்க நிகழ்வுகளும் நடைபெற்றன. சிறப்பாக நடந்து முடிந்த மாவீர்ர்நாள் நிகழ்வில் என்றும் இல்லாதவாறு பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal




























