குமரன்

வேலைக்கு ரோபோ

ஜப்பானில் அனைத்து இடங்களிலும் ரோபோ பயன்படுத்துவதற்கான ஆய்வுகளில் உள்ளனர். அந்த வகையில் பானசோனிக் நிறுவனம் தனது ஹாஸ்பி ரோபோவை ஜப்பானில் நாரிட்டா சர்வதேச விமான நிலையத்தில் சோதனைக்கு நிறுவியுள்ளது. பயணிகளின் தேவைக்கு ஏற்ப அருகிலுள்ள ஓட்டல் உள்ளிட்ட விவரங்களை ஹாஸ்பி தருகிறது. ஏற்கெனவே இந்த ரோபோ மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகிறது. 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் நடக்க உள்ளதால் ரோபோ சேவைகளை அதிகப்படுத்த ஜப்பான் திட்டமிட்டுள்ளது.

Read More »

அவுஸ்ரேலியாவிற்கு பீ்ட்டர்சன் அறிவுரை!

சுழற்பந்தை உங்களால் விளையாட முடியவில்லை என்றால் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்யாதீர்கள் என்று அவுஸ்ரேலியாவிற்கு பீ்ட்டர்சன் அறிவுறுத்தியுள்ளார். இங்கிலாந்து அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தவர் கெவிட் பீட்டர்சன். 2012-ம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. அப்போது 338 ரன்கள் குவித்தவர் பீட்டர்சன். இந்த மாதம் 23-ந்தேதி இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் அவுஸ்ரேலிய வீரர்கள் எப்படி விளையாடுவார்கள் என்ற கேள்வி உள்ளது. ஏனெனில் அந்த அணி ...

Read More »

விஜய் 61-ல் இணையும் பிரபல ஆடை வடிவமைப்பாளர்

விஜய் – அட்லி இணைந்துள்ள புதிய படத்தில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் இணைந்துள்ளார். விஜய் – அட்லி இணையும் விஜய் 61 படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் சென்னையில் தொடங்கியுள்ளது. காஜல் அகர்வால், சமந்தா, சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, ஜோதிகா, வடிவேல், சத்யன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ள இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும், இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், படத்தொகுப்புக்கு ரூபன், கலைக்கு முத்துராஜ், சண்டைப்பயிற்சிக்கு அனல் அரசு, திரைக்கதைக்கு விஜயேந்திர பிரசாத் ...

Read More »

அவுஸ்­­ரேலியாவில் பொது இடங்­களில் முகத்தை முழு­மை­யாக மறைக்கும் ஆடை அணிய தடை!

அவுஸ்­­ரேலி­யாவில் பொது இடங்­களில் பெண்கள் முகத்தை முழு­மை­யாக மறைக்கும் ஆடை அணி­வதைத் தடை செய்­வ­தற்குத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக அந்­நாட்டின் ஆளுங் கூட்­டணி தீர்­மா­னித்­துள்­ளது.  தலையை மறைக்கும் துணி மற்றும் ஏனைய மத அடை­யா­ளங்­களை அரச ஊழி­யர்கள் அணிந்து வரு­வதைத் தடை செய்­வது குறித்தும் அரசு பரி­சீ­லித்து வரு­கி­றது. அவுஸ்­­ரேலி­யாவில் வேக­மாக வளர்ந்­து­வரும் தீவிர வல­து­ சாரி சுதந்­திரக் கட்­சியின் வளர்ச்­சியை தடுப்­ப­தற்­கான முயற்­சி­களின் ஒரு பகு­தி­யாக அரசின் இந்த நட­வ­டிக்­கை கள் நோக்­கப்­ப­டு­கின்­றன. இந்த தடை­யா­னது பாட­சாலை மற்றும் நீதி­மன்றம் போன்ற இடங்­களில் அமுல்­ப­டுத்­தப்­ப­டும் எனத் ...

Read More »

அவுஸ்­­ரே­லிய இரு­பது 20 குழாமில் 36 வய­து­டைய க்ளிங்கர் அறி­முக வீரர்

இலங்­கைக்கு எதி­ராக இம்­மாதம் 17ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள 3 போட்­டி­களைக் கொண்ட சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தொட­ருக்­கான அவுஸ்­தி­ரே­லிய குழாமில் அறி­முக வீர­ராக 36 வய­து­டைய மைக்கல் கிளிங்கர் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்ளார். அத்­துடன், மூவகை சர்­வ­தேச கிரிக் கெட் போட்­டி­க­ளிலும் விளை­யா­டிய அனு­ப­சா­லி­யான விக்கெட்­காப்­பாளர் திமத்தி (டிம்) பெய்ன் 6 வரு­டங்­களின் பின்னர் குழா­முக்கு அழைக்­கப்­பட்­டு­ள்ளார். இவர்­களை விட வேகப்­பந்­து­வீச்­சாளர் ஜய் றிச்­சர்ட்சன், சக­ல­துறை வீரர் அஷ்டன் டேர்னர் ஆகி­யோரும் அறி­முக வீரர்­க­ளாக அவுஸ்­தி­ரே­லிய இரு­பது 20 கிரிக்கெட் குழாமில் சேர்த்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளனர். இந்­தி­யா­வுக்கு எதி­ரான ...

Read More »

குமார் குணரத்னத்திற்கு இலங்கை பிரஜா உரிமை

முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல்துறை உறுப்பினர் குமார் குணரத்னத்திற்கு இலங்கை பிரஜா உரிமை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக மக்கள் விடுதலை முன்னணியின் முக்கிய தலைவராக செயற்பட்ட இவர், கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று அந் நாட்டின் குடியுரிமையையும் பெற்றுக் கொண்டார். இதனையடுத்து, கடந்த ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு மீண்டும் சுற்றுலா விசாவில் வந்த அவர் (இலங்கைப் பிரஜை அல்லாத நிலையில்) அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டு பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். எனினும், கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப் ...

Read More »

வாட்ஸ்அப்பில் புது அம்சங்கள்: மிக விரைவில் வழங்கப்படுகிறது

வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருக்கும் புதிய அப்டேட் பல்வேறு புதிய அம்சங்களை வழங்குகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு விரைவில் புதிய அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. தற்சமயம் சோதனை செய்யப்பட்டு வரும் புதிய அம்சங்கள் வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டு வருகிறது. பீட்டா பதிப்பில் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப்பின் புதிய அம்சங்கள் சோதனை செய்யப்படும் போதே வழங்கப்படும். வாட்ஸ்அப் புதிய அப்டேட் மூலம் வழங்கப்பட இருக்கும் அம்சங்கள் மூலம் உங்களது நண்பர் இருக்கும் இடத்தை டிராக் செய்ய முடியும். இத்துடன் அவர்கள் ஸ்டேட்டஸ் ...

Read More »

ஆந்திர மக்களை மத்திய அரசு வஞ்சித்துவிட்டது

மத்திய பட்ஜெட் ஆந்திர மக்களுக்கு நிராசையாக இருக்கிறது. மத்திய அரசு ஆந்திர மக்களை வஞ்சித்துவிட்டது என்று நடிகை ரோஜா கூறியுள்ளார். நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மாநில மகளிரணி தலைவியுமான நடிகை ரோஜா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து வெளியே வந்த ரோஜாவிடம் நிருபர்கள் மத்திய பட்ஜெட் குறித்து கருத்து கேட்டனர். அதற்கு ரோஜா கூறியதாவது:- ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் மத்திய அரசில் அங்கம் வகிக்கிறது. அக்கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்கள் மத்திய மந்திரிகளாக ...

Read More »

அகதிகளை ஏற்றுக்கொள்ளும் ஒரு முறை ஒப்பந்தத்திற்கு டிரம்ப் மதிப்பளிப்பார்

அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் அகதிகளுக்கு விதித்துள்ள தடை பல்வேறு தரப்பினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதனால் அதிபர் ஒபாமா ஆட்சி காலத்தின் இறுதியில் கையெழுத்தான அவுஸ்ரேலிய-அமெரிக்க அகதிகள் ஒப்பந்தம் என்னவாகும் என்பது தொடர்பான அச்சமும் நிலவி வந்தது. இந்த நிலையில், அவுஸ்ரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களான நவுரு மற்றும் மனுஸ்தீவில் உள்ள அகதிகளை அமெரிக்காவில் மீள்குடியமர்த்தும் ஒரு முறை ஒப்பந்தத்திற்கு மதிப்பளிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதி செய்துள்ளதாக அவுஸ்ரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப் உடனான ...

Read More »

வித்தியாசமான அவுஸ்ரேலிய அணியை எதிர்பாருங்கள்!

இந்த முறை வித்தியாசமான அவுஸ்ரேலிய அணியை உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியான இந்தியா சந்திக்கும் என்று மிட்செல் ஜான்சன் எச்சரிக்கை செய்துள்ளார். ஓய்வு ஒழிச்சலற்ற சுழற்பந்த் கொண்டு இந்திய அணிக்குத் தொல்லைகள் கொடுக்கும் அவுஸ்ரேலிய அணி என்று மிட்செல் ஜான்சன் தெரிவித்துள்ளார். சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகைக்கு மிட்செல் ஜான்சன் கூறும்போது, “இந்தியாவில் பிட்ச்கள் பந்துகள் திரும்புவதற்கு சாதகமாக அமையும். தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகியவை தொடரை இழந்துள்ளன, இந்நிலையில் அவுஸ்ரேலியா அங்கு செல்வது சுவாரசியமானது. 2 அல்லது 3 ஸ்பின்னர்களுடன் அவுஸ்ரேலியா ...

Read More »