அவுஸ்­­ரே­லிய இரு­பது 20 குழாமில் 36 வய­து­டைய க்ளிங்கர் அறி­முக வீரர்

இலங்­கைக்கு எதி­ராக இம்­மாதம் 17ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள 3 போட்­டி­களைக் கொண்ட சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தொட­ருக்­கான அவுஸ்­தி­ரே­லிய குழாமில் அறி­முக வீர­ராக 36 வய­து­டைய மைக்கல் கிளிங்கர் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்ளார்.

அத்­துடன், மூவகை சர்­வ­தேச கிரிக் கெட் போட்­டி­க­ளிலும் விளை­யா­டிய அனு­ப­சா­லி­யான விக்கெட்­காப்­பாளர் திமத்தி (டிம்) பெய்ன் 6 வரு­டங்­களின் பின்னர் குழா­முக்கு அழைக்­கப்­பட்­டு­ள்ளார்.

இவர்­களை விட வேகப்­பந்­து­வீச்­சாளர் ஜய் றிச்­சர்ட்சன், சக­ல­துறை வீரர் அஷ்டன் டேர்னர் ஆகி­யோரும் அறி­முக வீரர்­க­ளாக அவுஸ்­தி­ரே­லிய இரு­பது 20 கிரிக்கெட் குழாமில் சேர்த்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளனர்.

இந்­தி­யா­வுக்கு எதி­ரான டெஸ்ட் தொடரில் விளை­யா­ட­வுள்ள பிர­தான வீரர்கள் பலர் இந்­தியா செல்­ல­வி­ருப்­பதால் அவர்கள் இரு­பது 20 கிரிக்கெட் குழாமில் இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வில்லை. மாறாக இளம் வீரர்­களும் புதி­ய­வர்­களும் குழா­முக்கு அழைக்­கப்­பட்­டுள்­ளனர்.

வழ­மை­யான அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வோர்னர், உஸ்மான் கவாஜா, மிச்செல் ஸ்டார்க், ஜொஷ் ஹேஸ்ல்வுட், க்ளென் மெக்ஸ்வெல் குழாமில் இடம்­பெ­றாத நிலையில் அணித் தலைமைப் பொறுப்பு ஆரொன் ஃபின்ச்­சிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.

சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தர­நிலை வரி­சையில் அவுஸ்­தி­ரே­லியா 6ஆம் இடத்தில் இருப்­ப­தாலும் பிர­தான வீரர்கள் இந்­திய டெஸ்ட் தொட­ருக்கு தயா­ராகி வரு­வ­தாலும் திற­மை­வாய்ந்த இளம் வீரர்கள் பல­ருக்கு வாய்ப்பு வழங்க தீர்­மா­னித்­த­தாக அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் தெரிவுக் குழு உறுப்­பினர் ட்ரவர் ஹோன்ஸ் தெரி­வித்தார்.

அவுஸ்­தி­ரே­லிய இரு­பது 20 குழாம்
ஆரொன் ஃபின்ச் (அணித் தலைவர்), மைக்கல் கிளிங்கர், ட்ரவிஸ் ஹெட், கிறிஸ் லின், மொய்சஸ் ஹென்றிக்ஸ், அஷ்டன் டேர்னர், டிம் பெய்ன், ஜேம்ஸ் போக்னர், பெட் கமின்ஸ், அடம் ஸம்பா, அன்ட்ரூ டை, ஜய் றிச்சர்ட்சன், பிலி ஸ்டன்லேக்.