ஜப்பானில் அனைத்து இடங்களிலும் ரோபோ பயன்படுத்துவதற்கான ஆய்வுகளில் உள்ளனர். அந்த வகையில் பானசோனிக் நிறுவனம் தனது ஹாஸ்பி ரோபோவை ஜப்பானில் நாரிட்டா சர்வதேச விமான நிலையத்தில் சோதனைக்கு நிறுவியுள்ளது.
பயணிகளின் தேவைக்கு ஏற்ப அருகிலுள்ள ஓட்டல் உள்ளிட்ட விவரங்களை ஹாஸ்பி தருகிறது. ஏற்கெனவே இந்த ரோபோ மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகிறது.
2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் நடக்க உள்ளதால் ரோபோ சேவைகளை அதிகப்படுத்த ஜப்பான் திட்டமிட்டுள்ளது.