விஜய் – அட்லி இணைந்துள்ள புதிய படத்தில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் இணைந்துள்ளார்.
மேலும், இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், படத்தொகுப்புக்கு ரூபன், கலைக்கு முத்துராஜ், சண்டைப்பயிற்சிக்கு அனல் அரசு, திரைக்கதைக்கு விஜயேந்திர பிரசாத் என பிரபல டெக்னீசியன்களும் கைகோர்த்துள்ள இப்படத்தில் தற்போது பிரபல ஆடை வடிவமைப்பாளரும் இணைந்துள்ளார்.
சமந்தா, காஜல் அகர்வால், ஹன்சிகா உள்ளிட்ட தமிழ் சினிமா நடிகைகளுக்கும், பாலிவுட்டில் பிரபலமான நடிகர், நடிகைகளுக்கும் ஆடை வடிவமைக்கும் பணிகளை மேற்கொண்ட நீரஜா கோனா என்பவர்தான் தற்போது இந்த படத்திற்கு ஆடை வடிவமைக்கும் பணிகளுக்காக ஒப்பந்தமாகியுள்ளார்.
நீரஜா கோனா, நடிகை சமந்தாவின் நெருங்கிய தோழியுமாவார். விஜய் நடிக்கும் படத்துக்கு இவர் ஆடை வடிவமைப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal