இந்த முறை வித்தியாசமான அவுஸ்ரேலிய அணியை உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியான இந்தியா சந்திக்கும் என்று மிட்செல் ஜான்சன் எச்சரிக்கை செய்துள்ளார்.
ஓய்வு ஒழிச்சலற்ற சுழற்பந்த் கொண்டு இந்திய அணிக்குத் தொல்லைகள் கொடுக்கும் அவுஸ்ரேலிய அணி என்று மிட்செல் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகைக்கு மிட்செல் ஜான்சன் கூறும்போது, “இந்தியாவில் பிட்ச்கள் பந்துகள் திரும்புவதற்கு சாதகமாக அமையும். தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகியவை தொடரை இழந்துள்ளன, இந்நிலையில் அவுஸ்ரேலியா அங்கு செல்வது சுவாரசியமானது. 2 அல்லது 3 ஸ்பின்னர்களுடன் அவுஸ்ரேலியா களமிறங்குமா என்று தெரியவில்லை.
ஆனால் இந்த முறை வித்தியாசமான அணியை எதிர்பார்க்கலாம், சிறப்பானவொன்றை அங்கு நிகழ்த்தக்கூடும் என்பதையும் இந்திய அணி எதிர்பார்க்கலாம். இயல்பானா அவுஸ்ரேலிய அணியாக இல்லாமல் வித்தியாசமாக அங்கு செயல்படும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்தியாவில் நாம் எதிர்கொள்வது அங்குள்ள பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைகளையே, இதனால் தரமான ஸ்பின்னர்களை களமிறக்குவது சிறந்ததுதான். ஆனால் புள்ளிவிவரங்கள் நமது வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமானவையாக உள்ளன.
தற்போது அவுஸ்ரேலிய ஸ்பின் பந்து வீச்சில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன” என்றார்.