குமரன்

நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை காலமானார்

முன்னாள் உலகி அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யாராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் மும்பையில் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள கிருஷ்ணராஜ் ராய் மும்பையில் உள்ள பிரபல லீலாவதி மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தார். அதனைத்தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிருஷ்ணராஜ் ராயை காண அவரது மகளான ஐஸ்வர்யாராய் துபாயில் தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்து மும்பை விரைந்தார். அதேபோல் ஐஸ்வர்யாவின் கணவரான அபிஷேக் பச்சன்,  நியூயார்க்கில் தனது படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு மும்பை திரும்பினர். மேலும் கிருஷ்ணராஜ் ராய் உடல்நிலையை மருத்துவமனைக்கு ...

Read More »

‘நந்திக்கடலுக்கான பாதை’ போர்க்குற்றத்தை நிரூபிக்கின்றது!

சிறீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவின் ‘நந்திக்கடலுக்கான பாதை’ சிறிலங்காப் படைகளுக்கெதிரான போர்க்குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று முன்தினம் நடாத்திய செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், பொதுமக்களுக்கெதிரான வன்முறைகள் எவ்வாறு சிறிலங்காப் படைகளினால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது என்பது தொடர்பில் அந்நூலில் குறிப்பிட்டுள்ள விடயங்களைச் சுட்டிக்காட்டிய அவர் படையினர் தமது சகாக்களின் கொலைகளுக்கு பழிவாங்கும் வகையில் பொதுச் சொத்துக்களை அழித்ததாகவும், அதற்கெதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காதது ...

Read More »

ஒளிரும் நீல நிறத்தில் மாறிய அவுஸ்திரேலிய கடல்கள்!

அவுஸ்திரேலியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கடற்கரைகளில் நிரந்தரமாக உருவாகியிருக்கும் ஒற்றை செல் பாசிகளால், கடல் நீல நிறத்தில் காட்சியளிக்கிறது. அவுஸ்திரேலியாவில் உள்ள தீவு மாநிலமான Tasmaniaவின் வடமேற்கு பகுதிகளில் உள்ள கடல்களை புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞர் சாட்வின் அதை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். கடலின் நிறம் கண்களை கவரும் வகையில் பிரகாசமான நீல வண்ணமயமாக மாறியுள்ளது. கடல் நிறத்தின் மாற்றத்துக்கான காரணம் குறித்து தாவரவியல் துறை பேராசிரியர் Gustaaf Hallegraeff கூறுகையில், கடற்கரைப் பகுதியில் உருவாகியுள்ள ஒரு பெரும் கடற்பாசிப் பெருக்கம் காரணமாக ...

Read More »

ஜிமெயில் அட்டாச்மென்ட் வீடியோக்களை பார்க்கும் வசதி அறிமுகம்

கணினிகளில் பயன்படுத்தக் கூடிய ஜிமெயில் சேவையில் வீடியோக்களை டவுன்லோடு செய்யும் முன் அவற்றை பிரீவியூ பார்க்கும் வசதி வழங்கப்பட உள்ளது. ஜிமெயில் சேவையை பயன்படுத்துவோருக்கு கூகுள் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. புதிய வசதியை கொண்டு ஜிமெயில் மூலம் அனுப்பப்படும் வீடியோக்களை டவுன்லோடு செய்யும் முன் பார்க்க முடியும். வீடியோ பயனுள்ளதாக இருப்பின் அதை டவுன்லோடு செய்யலாம். புதிய வசதியின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அதிகளவு டேட்டாவினை சேமிக்க முடியும். முன்னதாக ஜிமெயில் மூலம் அனுப்பப்படும் வீடியோக்களை டவுன்லோடு செய்யாமல் பார்க்க முடியாது. புதிய அப்டேட் ...

Read More »

கதாநாயகிகளை மையப்படுத்திய படங்கள்

தமிழ் பட உலகில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படங்கள் அதிகமாக தயாராகி வருகின்றன. தமிழ் திரையுலகம் ஆரம்பத்தில் இருந்து கதாநாயகர்கள் பிடியில் இருந்து வந்து இருக்கிறது. அவர்களை மனதில் வைத்தே இயக்குனர்கள் கதைகளை உருவாக்குவது, நடிகர்கள் மார்க்கெட்டை வைத்து விநியோகஸ்தர்கள் படங்களின் விலையை நிர்ணயிப்பது, திரையரங்குகள் ஒதுக்கீடு செய்வது என்றெல்லாம் இருந்தன. ஆனால் சமீபகாலங்களில் கதாநாயகிகளை மையப்படுத்தி குறைந்த பட்ஜெட்டில் தயாரான படங்கள் வசூலில் சக்கை போடு போட்டதால் பட உலகில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. நயன்தாரா, ஜோதிகா, தமன்னா, அனுஷ்கா, ...

Read More »

பெருவெள்ளத்தில் சிக்கி 14 மணிநேரம் உயிருக்கு போராடிய நபர்

அவுஸ்திரேலியாவில் நபர் ஒருவர் வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடி வந்த நிலையில், 14 மணி நேரத்திற்கு பின்னர் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டு படையினர் காப்பாற்றியுள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது. குயின்ஸ்லாந்து, காண்டமின்னில் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. லொறி ஓட்டுநர் ஒருவர் Leichhardt நெடுஞ்சாலை வழியாக பயணித்துக்கொண்டிருந்த போது, பெருவெள்ளத்தில் சிக்கியுள்ளார். லொறி வெள்ளத்தில் மூழ்க, ஓட்டுநர் லொறியின் மேல் ஏறியுள்ளார். சுற்றியும் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிலையில் தப்பிக்க வழியில்லாமல் இரவு முழுவதும் ஓட்டுநர் சிக்கியுள்ளார். இந்நிலையில், தகவலறிந்த மீட்புக்குழுவினர், 14 மணிநேரத்திற்கு பிறது ...

Read More »

தடுப்பூசி போடாத குழந்தைகளை ஆரம்ப பாடசாலைகளில் சேர்க்க தடை

அவுஸ்திரேலியா நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத குழந்தைகளை மருத்துவமனை மற்றும் ஆரம்ப பள்ளிகளில் சேர்க்க தடை விதிப்பது தொடர்பாக அந்நாட்டு அரசு தீவிர ஆலோசனையை மேற்கொண்டு வருகிறது. அவுஸ்திரேலியா நாட்டில் உள்ள ஒரு சில மாகாண அரசுகள் தடுப்பூசி போடாத குழந்தைகளை மருத்துவமனை மற்றும் நர்சரி பள்ளிகளில் சேர்க்க தடை விதித்துள்ளது. ஆனால், இதனை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த அந்நாட்டு பிரதமரான மால்கம் டர்ன்புல் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் 2000 பெற்றோர்களிடம் நடத்திய ஆய்வில் சுமார் 5 சதவிகித குழந்தைகளுக்கு முழுவதுமாக தடுப்பூசி ...

Read More »

சந்திரனில் பீர் தயாரிக்கப் போகிறதா இந்தியா?

கடந்த வியாழனன்று மக்களவையில் சுவையான கேள்வியொன்று விண்வெளித் துறையை கைவசம் வைத்திருக்கும் பிரதமரின் பதிலுக்காக காத்திருந்தது. கேள்வி இந்தியா நிலவில் பீர் காய்ச்சும் திட்டத்தை வைத்திருக்கிறதா? குறிப்பாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அத்திட்டத்தை நிறைவேற்றப் போகிறதா என்று கேட்டார் திருணமுல் கட்சியைச் சார்ந்த உறுப்பினரான சிசிர் குமார் அதிகாரி. சிசிர் குமாரின் கேள்வியானது மூன்று விதமானது: 1) இந்திய விண்கலம் ஏதேனும் நிலவில் பீர் தயாரிக்கும் திட்டம் உள்ளதா? 2) ஆம் எனில் ஆய்வு திட்டத்தின் விவரங்கள், ஈஸ்ட்டினைக் கொண்டு தயாரிக்கும் சாத்தியம் ...

Read More »

மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்தின் மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களின் தயாரிப்பு பணிகள் இந்த ஆண்டில் துவங்க இருப்பதாக சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களில் தெரியவந்துள்ளது. சாம்சங் நிறுவனம் சில ஆண்டுகளாக மடிக்கும் வசதி கொண்ட டிஸ்ப்ளேக்களை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்த நிலையில் மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான பணிகள் 2017 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு வாக்கில் துவங்கும் என்றும் கூறப்படுகிறது. செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் துவங்க இருக்கும் ஐஎஃப்ஏ 2017 விழாவில் சாம்சங் மடிக்கும் வசதி ...

Read More »

ஈரானிய இயக்குனரின் படத்தில் மலையாள நடிகை

பிரபல ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதியின் ‘பியாண்ட் தி கிளவுட்ஸ்’ படத்தில் மலையாள நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். ஒளிப்பதிவாளர் கே.யூ. மோகனின் மகளான மாளவிகாவுக்கு இது முக்கியமான வாய்ப்பாகும். முதலில் கதாநாயகி வேடத்துக்கு தீபிகா படுகோன் ஒப்பந்தமாகவிருந்தார். ஆனால் தற்போது மாளவிகாவே அந்த வேடத்துக்குத் தேர்வாகியுள்ளார். மும்பையில் அவர் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பை ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டார் இயக்குனர் மஜித் மஜிதி. இந்தப் படத்தில் ஷாகித் கபூரின் சகோதரர் இஷான் கட்டரும் நடித்து வருகிறார்.

Read More »