முன்னாள் உலகி அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யாராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் மும்பையில் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள கிருஷ்ணராஜ் ராய் மும்பையில் உள்ள பிரபல லீலாவதி மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தார்.
அதனைத்தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிருஷ்ணராஜ் ராயை காண அவரது மகளான ஐஸ்வர்யாராய் துபாயில் தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்து மும்பை விரைந்தார். அதேபோல் ஐஸ்வர்யாவின் கணவரான அபிஷேக் பச்சன், நியூயார்க்கில் தனது படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு மும்பை திரும்பினர். மேலும் கிருஷ்ணராஜ் ராய் உடல்நிலையை மருத்துவமனைக்கு நேரில் சென்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமித்தாப் பச்சன் விசாரித்தார். மேலும் அன்று இரவு முழுவதும் மருத்துவமனையிலேயே இருந்ததாகவும் கூறப்பட்டது.
கடந்த வாரம் கிருஷ்ணராஜ் ராயின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மருத்துவமனையிலேயே உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
Eelamurasu Australia Online News Portal

