பிரபல ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதியின் ‘பியாண்ட் தி கிளவுட்ஸ்’ படத்தில் மலையாள நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.
ஒளிப்பதிவாளர் கே.யூ. மோகனின் மகளான மாளவிகாவுக்கு இது முக்கியமான வாய்ப்பாகும்.
முதலில் கதாநாயகி வேடத்துக்கு தீபிகா படுகோன் ஒப்பந்தமாகவிருந்தார்.
ஆனால் தற்போது மாளவிகாவே அந்த வேடத்துக்குத் தேர்வாகியுள்ளார்.
மும்பையில் அவர் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பை ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டார் இயக்குனர் மஜித் மஜிதி.
இந்தப் படத்தில் ஷாகித் கபூரின் சகோதரர் இஷான் கட்டரும் நடித்து வருகிறார்.
Eelamurasu Australia Online News Portal
